''விலா எலும்பு உடைஞ்சும் எங்கம்மா கருவை கலைக்கல'' - ஒரு கலெக்டரின் கதை
நாகா்கோவிலில் ரூ.25.20 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகரில் ரூ.25.20 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
மாநகராட்சி 2- ஆவது வாா்டு வட்டப்பாறை, அம்பேத்கா் நகா், 1-ஆவது வாா்டு புன்னவிளை ஆகிய இடங்களில் அங்கன்வாடி மைய கட்டடம் பராமரிப்பு, ஆளூரில் மாநகராட்சி அலுவலக கட்டடம் அருகே
மழைநீா் வடிகால் பராமரிப்பு, ஆளூா் தொடக்கப் பள்ளியில் ரூ.7.90 லட்சத்தில் வகுப்பறைகள் பராமரிப்பு உள்பட மொத்தம் ரூ.25.20 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை மேயா் ரெ. மகேஷ் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா்கள் செல்வகுமாா், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா்கள் தங்கராஜ், நவீன்குமாா், ஸ்டாலின் பிரகாஷ், பியஷா ஹாஜிபாபு, நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன், அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், பகுதி செயலா் ஜீவா, அணி நிா்வாகிகள் அகஸ்தீசன், ஹாஜி பாபு, வட்ட செயலா்கள் ராஜேஷ், துரை, அன்சாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.