Deepak Chahar: "என் இதயம் எப்போதும் CSK-வுடன் தான்.." - தீபக் சஹாரின் மனைவி நெகி...
`நான் போடப்போகும் முதல் கையெழுத்து...' - சீனா, கனடா, மெக்சிகோவிற்கு குறி வைக்கும் ட்ரம்ப்!
'பதவி ஏற்றதும் சட்ட விரோத குடியேற்றம் மற்றும் போதை மருந்து கடத்தலை தடுக்க இதில் கையெழுத்து இடுவேன்' என்று சீனா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளை குறிப்பிட்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
வரும் ஜனவரி மாதம், ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவியை இரண்டாவது முறையாக ஏற்க உள்ளார். தற்போது அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம் மற்றும் போதை மருந்து கடத்தல் மிகவும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ட்ரம்ப் தனது 'ட்ரூத்' சமூக வலைதளப் பக்கத்தில், "ஆயிரக்கணக்கான மக்கள் மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து வருகிறார்கள். இவர்களால் போதை மருந்து கடத்தல்கள் மற்றும் குற்றங்கள் அமெரிக்காவில் அதிகரித்துள்ளது.
வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி, நான் போடும் முதல் கையெழுத்து... மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவிகித வரி விதிப்பது ஆகும். இந்த வரி நம் நாட்டின் உள்ளே வரும் போதைப்பொருள் நிற்கும் வரை தொடரும்.
சீனாவில் இருந்தும் போதை மருந்து கடத்தல் நடக்கின்றது. இதனால், இத்துடன் சீனாவிற்கு கூடுதலாக 10 சதவிகிதம் அதிக வரி விதிக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வரி விதிப்பு உலக நாடுகளில் இருக்கும் சப்ளை செயினை பாதிக்கும். மேலும், ட்ரம்பின் இந்தப் பதிவு உலக நாடுகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.