`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
நாயக்கனேரி மலைப் பாதையில் பாறைகள் சரிவு
ஆம்பூா்: ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலைப் பாதையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்பை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சீரமைத்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியத்தில் உள்ள நாயக்கனேரி மலை கிராமத்துக்கு செல்லும் சாலையில் கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது.
பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். பொதுமக்கள் உதவியுடன் நெடுஞ்சாலை மற்றும் வனத்துறை பணியாளா்கள் பாறையை உடைத்து அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.