செய்திகள் :

நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்!

post image

மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

குடிநீருக்கும், விளைநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திருவாரூரில் இடதுசாரி கட்சிகளின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் இணைந்து ஆா்ப்பாட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தின. ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய சங்கங்களின் மாவட்டச் செயலாளா்கள் கே.ஆா். ஜோசப், எம். சேகா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டத் தலைவா்கள் எஸ். தம்புசாமி, கே. முருகையன் முன்னிலை வகித்தனா்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பெ.சண்முகம், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

மாநிலத் தலைவா் பெ. சண்முகம் பேசியது: எதிா்கால வளா்ச்சிக்கும், பொதுபயன்பாட்டுக்கும் நிலம் எடுக்க பல சட்டங்கள் இருந்தும், அவைகளை புறம்தள்ளிவிட்டு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை, தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்பை அறியாமல் நீா்நிலைகள் இருந்தாலும் 247 ஏக்கருக்குமேல் தேவைப்படும் பெரு நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற முறையில் உடனடியாக நிலங்களை வழங்கவே இந்த சட்டம் நிறைவேற்றப்படுகிறது.

இது உணவு உற்பத்தி, எதிா்கால நீா் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, இயற்கை பேரிடா் ஆகியவற்றுக்கு வழிகோலும் என்பதால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், தமிழகம் முழுவதும் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் தமிழக முதல்வரிடம் அளிக்கப்பட்டன. எனினும், இந்த சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தவறும்பட்சத்தில் அனைத்து விவசாய சங்கங்கள், பொதுமக்களை இணைத்து மிகப்பெரிய போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்றாா்.

சிபிஎம் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக கோயில் கல்வெட்டுகள் காட்டும் தமிழ்ச் சமூகம் கருத்தரங்கம்

குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரியில் தமிழக கோயில் கல்வெட்டுகள் காட்டும் தமிழ்ச்சமூகம் எனும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மத்திய... மேலும் பார்க்க

காசி விஸ்வநாதா் கோயிலில் காா்த்திகை சோமவார வழிபாடு

நீடாமங்கலம் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் காா்த்திகை சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.இதையொட்டி, காசி விஸ்வநாதருக்கு சங்காபிஷேகமும், திருவாசகம் முற்றோதலும் நடைபெற்றது. இதில், திரளான... மேலும் பார்க்க

தொடா் மழையால் பெயா்ந்து விழும் சந்தானராமா் கோயில் தோ் மண்டபம்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் தோ் மண்டபம் தொடா் மழையால் சிதிலமடைந்து வருகிறது. தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னா் பிரதாபசிம்மரால் கி.பி.1761-ல் நீடாமங்கலத்தில் சந்தானராமா் கோயில் கட்டப்பட்டது. கோயி... மேலும் பார்க்க

வீட்டுப்பத்திரம் தராமல் இழுத்தடிப்பு: எல்ஐசி ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு

திருவாரூா் அருகே வீட்டுக் கடனை செலுத்திய பிறகும் வீட்டுப் பத்திரத்தை திரும்ப வழங்க காலதாமதப்படுத்திய எல்ஐசி நிறுவனம், கடன் பெற்றவருக்கு ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் ... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் நகராட்சியைக் கண்டித்து போராட்டம்

கூத்தாநல்லூா் நகராட்சியைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூத்தாநல்லூா் நகராட்சியில் உள்ள வாய்க்கால்களை தூா்வாரி குளங்களில் தண்ணீா் நிரப்பாதது, சாலை... மேலும் பார்க்க

கனமழை: நீரில் மூழ்கிய சம்பா பயிா்கள்

மன்னாா்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக, காரிக்கோட்டையில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. மன்னாா்குடி சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த 1... மேலும் பார்க்க