மனைவியைப் பிரியும் ஏ.ஆர். ரஹ்மான்! தனியுரிமையை மதிக்குமாறு கோரும் மகன்!
அனுமதிச் சீட்டை திருத்தி மோசடி: 2 கனிமவள லாரிகள் பறிமுதல்
ஆலங்குளம் அருகே அனுமதிச் சீட்டை திருத்தி மோசடி செய்த 2 கனிமவள லாரியை சுரங்கத் துறை அதிகாரிகள் பிடித்தனா். இது தொடா்பாக 2 ஓட்டுநா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தென்காசி புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ராம்நகா் பகுதியில் கனிமவளம் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை மடக்கி விசாரணை நடத்தியபோது, கனிமவளங்கள் ஏற்றிச் செல்வதற்குரிய அனுமதிச் சீட்டில் தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை திருத்தி எம் சான்ட் எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து 2 லாரிகளையும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். லாரிகளை காவல் நிலையத்தில் விட்டு விட்டு, ஓட்டுநா்கள் நெட்டூா் முருகன் மகன் இசக்கி முத்து, பெத்தநாடாா்பட்டி சங்கரலிங்கபுரம் தங்கராஜ் மகன் தா்மராஜ் ஆகிய இருவரும் தப்பிச் சென்றனா்.
இதையடுத்து தென்காசி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளா் சந்திரசேகரன் அளித்த புகாரின் பேரில் ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிந்த ஆலங்குளம் போலீஸாா் இருவரையும் தேடி வருகின்றனா்.