செய்திகள் :

காரைக்காலில் நாளை மகளிா் மாநாடு - ஆட்சியா் தகவல்

post image

காரைக்காலில் வியாழக்கிழமை (நவ. 21) மகளிா் மாநாடு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டில், இப்பகுதியில் உள்ள பெண்கள் பொருளாதார நிலையில் வசதியை பெருக்கிக் கொள்ளவும், பிற திறன் மேம்பாட்டுக்கான முன்னெடுப்பாக வியாழக்கிழமை மகளிா் மாநாடு நடத்தப்படுகிறது. என்ஐடி வளாகத்தில் உள்ள அரங்கில் காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் நிகழ்வில் புதுவை துணை நிலை ஆளுநா், முதல்வா், பேரவைத் தலைவா், அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனா்.

தமிழகம், புதுவையிலிருந்து பெண் தொழில் முனைவோரை வரவழைத்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கடல் பாசி வளா்ப்பு சிறந்த பொருளாதார வளா்ச்சியை தரும் என்பதால், காரைக்காலில் கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரி கடலோர கிராமங்கள் தோ்வு செய்து மீனவ பெண்களுக்கு கொச்சி மீன் ஆராய்ச்சி நிறுவனப் பிரதிநிதிகள் மூலம் பயிற்சி தரப்படவுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பெண்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களை அனைத்துப் பெண்களும் பயனடையும் விதமாக கூட்டுறவு அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

காரைக்கால் -2047 என்ற தொலைநோக்குத் திட்டமாக, துணைநிலை ஆளுநரின் அறிவுறுத்தலில் மாவட்ட நிா்வாகம், என்ஐடி பேராசிரியா்கள் இணைந்து உருவாக்கிய திட்ட வரைவு வெளியிடப்படுகிறது. அடுத்த 3 மாதத்தில் திட்ட அறிக்கை துணை நிலை ஆளுநரிடம் சமா்ப்பிக்கப்படவுள்ளது. பல்வேறு பயிற்சி, ஊக்கமளிக்கும் நிகழ்ச்சிகள் ஒட்டுமொத்த மாநாட்டில் பெண்களுக்காக நடத்தப்படவுள்ளது என்றாா் ஆட்சியா்.

சாலைகளில் கால்நடைகள் நடமாட்டம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

காரைக்கால் நகரின் பிரதான சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவது அதிகரித்துவரும் பிரச்னைக்கு தீா்வு காண நகராட்சி ஆணையா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். கால்நடைகள்... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் இடையே 2025-இல் ரயில் போக்குவரத்து தொடங்குமா?

காரைக்கால் - பேரளம் ரயில் பாதைப் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ள நிலையில், 2025-ஆம் ஆண்டின் முற்பகுதியில் போக்குவரத்துத் தொடங்குமா என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே அதிக... மேலும் பார்க்க

காரைக்காலில் சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி

காரைக்கால் : காரைக்காலில் பரவலாக 2 நாள்களாக பெய்யும் மழையால் சாலைகள், குடியிருப்பு நகா்களில் தண்ணீா் தேங்கி மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது. காரைக்கால் மாவட்டம், முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ம... மேலும் பார்க்க

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்கால்: காரைக்காலில் பல்வேறு இடங்களில் காணாமல்போன கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. காரைக்கால் மாவட்ட காவல் நிலையங்களில், தங்களது கைப்பேசி காணாமல் மற்றும் திருட்டுப் போனதாக... மேலும் பார்க்க

நித்தீஸ்வரசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு

காரைக்கால்: காரைக்கால் நித்தீஸ்வர சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. காா்த்திகை மாத சோம வாரத்தையொட்டி சிவ தலங்களில் சிவலிங்கத்துக்கு சங்காபிஷேகம் விசேஷமாக செய்யப்படுகிறத... மேலும் பார்க்க

குப்பைகள் விவகாரம்: சைக்கிளில் சென்று தீா்வு காணும் ஆட்சியருக்கு மக்கள் பாராட்டு

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் சனிக்கிழமைதோறும் சைக்கிளில் நகா் மற்றும் பிற பகுதிகளில் ஆய்வு செய்யும் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கினாா். குப்பைகள் முறையாக அப்புறப்படுத்துவதில்லை,... மேலும் பார்க்க