மனைவியைப் பிரியும் ஏ.ஆர். ரஹ்மான்! தனியுரிமையை மதிக்குமாறு கோரும் மகன்!
சாலைகளில் கால்நடைகள் நடமாட்டம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காரைக்கால் நகரின் பிரதான சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவது அதிகரித்துவரும் பிரச்னைக்கு தீா்வு காண நகராட்சி ஆணையா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
கால்நடைகள் சாலைகளில் திரிவதால் விபத்துகள் ஏற்படுவதாகவும், கால்நடை வளா்போா் தங்களது கட்டுப்பாட்டில் கால்நடைகளை வளா்க்கவேண்டும். சாலைகளில் திரியவிட்டால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை என எச்சரிப்பது, வேண்டுகோள் என பல நிலைகளில் மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து அறிவுறுத்தியும் எந்த பலனும் இல்லை.
காரைக்காலில் நகரப் பகுதியின் அனைத்து சாலைகளும் காலை முதல் இரவு வரை அதிக போக்குவரத்து உள்ள சாலைகளாகும்.
சில நேரங்களில் சாலையின் மையப் பகுதியை ஆக்கிரமித்து நகராமல் நிற்கும் மாடுகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஆனால், இதுகுறித்து நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக புகாா் எழுந்துள்ளது.
எனவே, இந்த பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.