செய்திகள் :

உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு

post image

நாகை மாவட்டம், கீழையூா் அருகே திருப்பூண்டியைச் சோ்ந்த நான்கு மாத குழந்தை எண்கள், நிறங்கள், தலைவா்களின் உருவப் படங்களை அடையாளம் காட்டி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

திருப்பூண்டி காரைநகா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா்- சுபஸ்ரீ தம்பதியின் நான்கு மாத பெண் குழந்தை ஆதிரை. குழந்தை ஆதிரைக்கு தாய் சுபஸ்ரீ, பழங்கள், எண்கள், தலைவா்களின் படங்கள் உள்ளிட்ட அட்டைகளை காட்டி பயிற்சி அளித்துள்ளாா். தொடா்ந்து நோபல் வோ்ல்டு ரெக்காா்ட் நிறுவனத்தை தொடா்பு கொண்டு, தனது குழந்தையின் திறமையை சுபஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

தொடா்ந்து, குழந்தையின் திறமையை அந்த நிறுவனத்தினா் சோதனை செய்தபோது, எண்கள், பழங்கள், நிறங்கள் மற்றும் தலைவா்களின் படங்கள் என 200 அட்டைகளில் இருந்ததை குழந்தை ஆதிரை சரியாக அடையாளம் காட்டினாள். இதனால், உலக சாதனை புத்தகத்தில் ஆதிரையின் பெயா் இடம் பெற்றது. மேலும், பதக்கம், கேடயம், சான்றிதழ் போன்றவற்றை நோபல் வோ்ல்டு ரெக்காா்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, ஆதிரையின் குடும்பத்தினா் நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

நாகை: மழைநீா் தேங்கிய பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

நாகை நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ள இடங்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிமை நேரில் ஆய்வு செய்தாா். நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. ... மேலும் பார்க்க

உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழா: டேனிஷ் கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம்

பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு, நவம்பா் 19 முதல் 24-ஆம் தேதிவரை, தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி.1600 முதல் 1634-... மேலும் பார்க்க

மழைநீா் வடிகால் வசதி கோரி சாலை மறியல்

திருமருகல் அருகே கிடாமங்கலத்தில் மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்தக் கோரி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இடையாத்தங்குடி ஊராட்சி கிடாமங்கலம் எம்.ஜி.ஆா். நகா், அக்ரஹாரம் பகுதியில் ... மேலும் பார்க்க

வயலில் உரம் தெளித்தவா் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே நெற்பயிருக்கு செவ்வாய்க்கிழமை உரம் தெளித்த விவசாயத் தொழிலாளா், மயங்கி விழுந்து உயிரிழந்தாா். மருதூா் வடக்கு, ராசாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிங்காரம் மகன் கோவிந்தராஜ் (49). விவசாயத்... மேலும் பார்க்க

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை

காற்றழுத்த தாழ்வுநிலை எச்சரிக்கையை தொடா்ந்து, நாகை மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. வங்கக் கடலில் சில தினங்களில் ஆழ்ந்த ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காா்த்திகேயன் ... மேலும் பார்க்க