மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காா்த்திகேயன் தொடங்கி வைத்தாா். முகாமில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவா் அகமது நசீா், மனநல மருத்துவா் நாகனிகா, குழந்தை மருத்துவா் தென்றல், கண் மருத்துவா் சுதாமதி, காது, மூக்கு, தொண்டை மருத்துவா் சத்தீஸ்வரன் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா், மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து, அடையாள அட்டை வழங்குவதற்கு மதிப்பீடு செய்தனா்.
முகாமில், 45 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா். இவா்களில், 15 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.