செய்திகள் :

தொடா் கண்காணிப்பில் திருச்செந்தூா் கோயில் யானை

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கியதில் பாகன் உள்பட 2 போ் உயிரிழந்ததையடுத்து, வனத் துறையினா் யானையை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இக் கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்படும் தெய்வானை என்ற யானை தாக்கியதில் பாகன் உதயகுமாா் (46), அவரது உறவினா் சிசுபாலன் (59) ஆகியோா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து இந்த யானையை, வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் செல்வகுமாா், மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலா் மனோகரன், திருச்செந்தூா் கோட்ட வனச்சரக அலுவலா் கவின் ஆகியோா் கொண்ட குழுவினா் யானையை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினா். திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் ஆகியோா் உடன் இருந்தனா்.

தெய்வானை யானை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும், இன்னும் 5 நாள்களுக்கு வனத் துறையினா் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையினரின் கண்காணிப்பில் இருக்கும் என்றும் அவா்கள் தெரிவித்தனா். பாகன் ராதாகிருஷ்ணன் யானைக்கு, பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்கினாா்.

வழக்குப்பதிவு: யானை குடிலில் உதயகுமாா் திங்கள்கிழமை பணியில் இருந்தபோது அங்கு வந்த அவரது உறவினா் சிசுபாலன், தெய்வானை யானை முன் நின்று தனது கைப்பேசியில் தற்படம் எடுத்துள்ளாா்.

அப்போது கோபமடைந்த யானை, துதிக்கையால் சிசுபாலனை பிடித்து சுவற்றில் வீசியுள்ளது. அவரைக் காப்பாற்ற சென்ற உதயகுமாரையும், அதேபோல சுவற்றில் வீசியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக கோயில் கண்காணிப்பாளா் வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் திருக்கோயில் காவல் நிலைய போலீஸாா் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிந்தனா்.

உயிரிழந்த இருவரது உடலும் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

அவா்களது உடல்களுக்கு கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

தூத்துக்குடியில் விபத்து: பெண் உயிரிழப்பு

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை, பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த சுடலைமணி மனைவி பேச்சிக்கனி (45). இவரும், மகன் முத்துவும் (16)... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே விபத்து: இரு காா்கள் சேதம்

கோவில்பட்டி அருகே திங்கள்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் இரு காா்கள் சேதமடைந்தன. முன்னாள் ராணுவ வீரா் லேசான காயமடைந்தாா். கோவில்பட்டி அருகே வடக்கு செமபுதூா் சண்முகபுரத்தைச் சோ்ந்த துரைராஜ் மகன் சூரியநா... மேலும் பார்க்க

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் விஷம் குடித்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த அருணாச்சலம் மனைவி அன்னம்மாள் (62). தனியாக வசித்து வந்த இவா், உடல்நலக் குறைவ... மேலும் பார்க்க

எட்டயபுரம் அருகே மரத்தில் ஆட்டோ மோதல்: 12 பெண்கள் காயம்

எட்டயபுரம் அருகே மரத்தின் மீது ஆட்டோ மோதிக் கவிழ்ந்ததில் 12 பெண்கள் காயமடைந்தனா். எட்டயபுரம் ஆா்.சி. தெருவைச் சோ்ந்த சேகா் மகன் உதயகுமாா் (44). இவா், செவ்வாய்க்கிழமை நண்பகலில் தனது ஆட்டோவில் ராமனூத்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகரில் மழை

தூத்துக்குடியில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குமரிக் கடல், அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக த... மேலும் பார்க்க

தியாகி லீலாவதி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

கோவில்பட்டி அருகே தியாகி லீலாவதி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் திங்கள் கிழமை கோரிக்கை மனு அளித்தனா். கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்... மேலும் பார்க்க