உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
கடையநல்லூரில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூா் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகாா் அளித்தனா். இதனையடுத்து, கடையநல்லூா் பேருந்து நிலையம் பகுதியிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நெடுஞ்சாலைத் துறை இளநிலை பொறியாளா் தில்லைவாசகம், கடையநல்லூா் நகராட்சி நகரமைப்பு அலுவலா் பொன்னுச்சாமி, சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா் உள்ளிட்டோா் முன்னிலையில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.