செய்திகள் :

நீலகிரி செல்வோர் கவனத்துக்கு... திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

post image

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு இன்று(ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இ-பாஸ் பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

நீலகிரியில் அளவுக்கு அதிகமான வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பதோடு, சுற்றுலாப் பயணிகள் குறித்த நேரத்துக்குள் சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், உள்ளூர் மக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு நாள்தோறும் எத்தனை வாகனங்கள் வருகின்றன என்பது குறித்து ஆராய உயா்நீதிமன்றம் வல்லுநர் குழு அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரைப்படி வார நாள்களில் 6000 வாகனங்களுக்கும், வார இறுதி நாள்களில் 8000 வாகனங்களுக்கும் இ -பாஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று(ஏப். 1) நீலகிரிக்கு செல்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட இ-பாஸ் பகல் 12 மணியுடன் நிறைவடைந்ததால், இ-பாஸ் பெறாத வாகனங்களை திருப்பி அனுப்பும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 12 சோதனைச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் இ-பாஸ் வழங்க க்யூஆர் கோட் பதிவு செய்யப்பட்ட பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆன்லைன் மூலமும் இ- பாஸை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இன்றுமுதல் வருமான வரி மாற்றங்கள் அமல்: தெரிந்துகொள்ள வேண்டியவை!

பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் பார்க்க

கச்சத்தீவு விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை அர... மேலும் பார்க்க

பண்ருட்டி பலா, முந்திரி உள்ளிட்ட 6 பொருள்களுக்கு புவிசார் குறியீடு!

பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரிக்கு உள்ளிட்ட 6 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.தமிழகத்தில் மேலும் 6 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி ... மேலும் பார்க்க

சிவாஜி வீடு ஜப்திக்கு எதிரான வழக்கு: ராம்குமாருக்கு உதவ பிரபு மறுப்பு!

நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு விசாரணையில், ராம்குமாருக்கு உதவ நடிகர் பிரபு தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிய... மேலும் பார்க்க

மருதமலை கோயிலில் வெள்ளிவேல் திருட்டா? நிர்வாகம் மறுப்பு!

கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழக்கு நடைபெறவிருக்கும் நிலையில், வெள்ளிவேல் திருடப்பட்டதாக வெளியாகும் செய்திகளுக்கு கோயில் நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்... மேலும் பார்க்க

பகல் 1 வரை 25 மாவட்டங்களில் மழை தொடரும்!

தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் வியாழக்கிழமை பகல் 1 மணிவரை லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்... மேலும் பார்க்க