செய்திகள் :

நேபாள வன்முறை: துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல் துறை அல்ல! - முன்னாள் பிரதமர் மறுப்பு!

post image

நேபாளத்தின் ஜென் - ஸி போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடத்த அரசு உத்தரவு கொடுக்கவில்லை எனப் பதவி விலகிய முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி தெரிவித்துள்ளார்.

நேபாள நாட்டில், சமூக ஊடகங்கள் மீதான தடைகள் மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றை எதிர்த்து, ஜென் - ஸி என்றழைக்கப்படும் இளம்தலைமுறையினர் மாபெரும் போராட்டம் நடத்தினர்.

கடந்த செப்.8 ஆம் தேதி, போராட்டத்தின் முதல் நாளின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 19 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, போராட்டம் வன்முறையாக வெடித்ததால், அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனால், நேபாள அரசு கவிழ்க்கப்பட்டு, கடந்த செப்.12 ஆம் தேதி முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா கார்கி இடைக்கால பிரதமராகப் பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து, ராணுவத்தின் பாதுகாப்பில் அவர்களது முகாம்களில் தங்கியிருந்த முன்னாள் பிரதமர் சர்மா ஓலி அங்கிருந்து நேற்று (செப்.18) வெளியேறி தனியார் வீட்டில் குடியேறியுள்ளார்.

இந்நிலையில், நேபாளத்தின் 10 ஆவது அரசியலமைப்பு நாளை முன்னிட்டு இன்று சர்மா ஓலி தனது முகப்புத்தகப் பக்கத்தில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அரசு உத்தரவு வழங்கவில்லை எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்:

“போராட்டக்காரர்கள் மீது சுடப்பட்ட தோட்டாக்கள் ஆட்டோமேடிக் துப்பாக்கிகளில் இருந்து வந்தவை. காவல் துறையினரிடம் அத்தகைய துப்பாக்கிகள் கிடையாது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அமைதியான போராட்டத்தில் ஊடுருவிய சதிகாரர்கள் வன்முறையாக அதை மாற்றினார்கள். இதனால்தான், நமது இளைஞர்கள் கொல்லப்பட்டனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேபாள வன்முறையில் 3 காவல் துறை அதிகாரிகள் உள்பட மொத்தம் 72 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆப்கனில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்குத் தடை!

Former Prime Minister K.P. Sharma Oli has said that the government did not give the order to open fire during the Gen-Zi protests in Nepal.

காஸா போர் நிறுத்தத்திற்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா! உலக நாடுகள் கண்டனம்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்த காஸா போர் நிறுத்தத் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்ததால் காஸாவில் போர் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல... மேலும் பார்க்க

ஆப்கனில் பிரிட்டன் தம்பதி விடுதலை! மாதங்கள் கழித்து மனம் மாறிய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில், சொல்லப்படாத குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த வயதான தம்பதியை தலிபான் அரசு விடுதலைச் செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆ... மேலும் பார்க்க

உலகம் கவனிக்கிறது: பாகிஸ்தான் - பயங்கரவாதிகள் உறவு குறித்து இந்தியா!

ஆபரேஷன் சிந்தூரின் போது நடந்த பாதிப்புகள் குறித்தும், தங்களுக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்புகள் மாறி மாறி உண்மையைக் கொட்டி வரும் நிலையில்,... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், ஒரே நாளில் நடைபெற்ற 2 வெவ்வேறு வெடிகுண்டு தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர். ஈரான் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், நேற்ற... மேலும் பார்க்க

ஆப்கனில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்குத் தடை!

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆட்சி அமைத... மேலும் பார்க்க

காஸா சிட்டியில் இருந்து 2.5 லட்சம் போ் வெளியேற்றம்

கடந்த ஒரு மாதத்தில் காஸா சிட்டியில் இருந்து அண்மையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. அதிகாரிகள் கூறியதாவது: காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவர... மேலும் பார்க்க