நாகூர் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
பதஞ்சலி வருவாய் 23% அதிகரிப்பு!
புதுதில்லி: பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி ஆயுர்வேதத்தின் மொத்த வருமானம் 2023-24 ஆம் ஆண்டில் 23.15% உயர்ந்து ரூ.9,335.32 கோடியாக இருந்தது. இது பதஞ்சலி ஃபுட்ஸ் மற்றும் பிற குழு நிறுவனங்களின் வருமானத்திற்கு உதவியது என்று நிறுவனம் தாக்கல் செய்த ஆர்ஓசி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2024 நிதியாண்டில் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் பிற வருமானம் ரூ.2,875.29 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் காலாண்டில் ரூ.46.18 கோடியாக இருந்தது. மார்ச் 2024 உடன் முடிவடைந்த நிதியாண்டில் அதன் வருவாய் 14.25% குறைந்து ரூ.6,460.03 கோடியாக உள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேத் தனது உணவு வணிகத்தை ஜூலை 1, 2022 அன்று பதஞ்சலி ஃபுட்ஸுக்கு மாற்றியதால் வருவாய் பாதிப்படைந்தது. இதில் பிஸ்கட், நெய், தானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் அடங்கும்.
இதையும் படிக்க : விலைகள் உயரும் பிஎம்டபிள்யு காா்கள்
2024ஆம் நிதியாண்டில் அதன் மொத்த லாபம் ஐந்து மடங்கு அதிகரித்து ரூ.2,901.10 கோடியாக இருந்தது.
பதஞ்சலி ஆயுர்வேத் மார்ச் 31, 2023 அன்று முடிவடைந்த நிதியாண்டில் ரூ.7,533.88 கோடி வருவாயில், மொத்த லாபம் ரூ 578.44 கோடியாக அறிவித்தது. மற்ற வருமானங்களையும் உள்ளடக்கிய பட்டியலிடப்படாத நிறுவனமான பதஞ்சலியின் ஆயுர்வேதத்தின் மொத்த வருமானம் 2023ல் ரூ.7,580.06 கோடியாக இருந்தது. அதே வேளையில் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் விளம்பர விளம்பர செலவுகளும் 2024ல் 9.28% அதிகரித்து ரூ.422.33 கோடியாக இருந்தது.
பதஞ்சலி முக்கியமாக ஆயுர்வேத தயாரிப்பு மற்றும் எஃப்எம்சிஜி வணிகத்தில் முடி பராமரிப்பு, தோல் பராமரிப்பு, பல் பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு, பால் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் மொத்த வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கியது.