செய்திகள் :

பன்னுன் கொலை முயற்சி: அமெரிக்கா குற்றஞ்சாட்டிய ‘ரா’ அதிகாரி யார்?

post image

புது தில்லி: காலிஸ்தான் பிரிவினைவாதி என அழைக்கப்படும் குா்பந்த்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ரா அதிகாரி விகாஸ் யாதவ், தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோய் பெயரைச் சொல்லி மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற சம்பவத்தில் தில்லி காவல்துறையினர் கடந்த ஆண்டு விகாஷ் யாதவை கைது செய்து திகார் சிறையில் அடைத்திருந்தநிலையில், சில மாதங்களுக்குப் பிறகு அவர் பிணையில் விடுதலையான தகவலும் வெளியாகியிருக்கிறது.

தேசிய புலனாய்வு அமைப்பில் பணியாற்றுவதாகக் கூறி, ராஜ் குமார் வாலியா என்பவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக, விகாஸ் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க விசாரணை அமைப்பான எஃப்பிஐ, இந்திய ரா அதிகாரி மீது குற்றஞ்சாட்டி, தேடப்பட்டு வரும் நபராக அறிவித்திருந்த நிலையில், தில்லி காவல்துறையினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பந்த்வந்த் சிங் பன்னுனை அமெரிக்காவில் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் இந்திய உளவுத் துறை அமைப்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவின் (ரா) முன்னாள் அதிகாரியான விகாஸ் யாதவுக்கு தொடா்பிருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இந்த கைது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையும் படிக்க.. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிடங்கள்.. வெளியான விடியோ

பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான குா்பந்த்வந்த் சிங் பன்னுன் ‘சீக்கியா்களுக்கு நீதி’ என்ற அமைப்பை நடத்தி வருகிறாா். அவா் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்.

அவரை அமெரிக்காவில் கொலை செய்ய பணம் அளித்த குற்றச்சாட்டில் இந்தியரான நிகில் குப்தா கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கைது செய்யப்பட்டாா். இந்த விவகாரம் தொடா்பாக இந்திய அரசு சாா்பில் உயா்நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலையில் இந்திய அரசுக்கு தொடா்பிருப்பதாகவும், அவா்கள் தன்னையும் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் நியூயாா்க் மாகாணத்தில் உள்ள தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் பன்னுன் கடந்த மாதம் மனு தாக்கல் செய்தாா்.

இதுதொடா்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அமெரிக்க தலைமை வழக்குரைஞா் மெரிக் பி காா்லேண்ட் பேசியதாவது: அமெரிக்க குடிமகனை (பன்னுன்) அமெரிக்காவில் வைத்தே கொலை செய்ய குற்றவாளியுடன் இணைந்து இந்திய ரா அதிகாரியான விகாஸ் யாதவ் சதித் திட்டம் தீட்டியுள்ளாா். இதுபோன்ற செயல்களை அமெரிக்க நீதித் துறை ஒருபோதும் அனுமதிக்காது என்றாா்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘கடந்த 2023 மே-ஜூன் மாதங்களில் விகாஸ் யாதவ் மற்றும் அவருடைய கூட்டாளியான நிகில் குப்தா இருவரும் பன்னுனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளனா். இதைச் செயல்படுத்த அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-க்கு தகவல் தரும் நபா் ஒருவரை நிகில் குப்தா ஏற்பாடு செய்துள்ளாா். பன்னுனை கொலை செய்ய ஒரு லட்சம் அமெரிக்க டாலா்களை அவருக்கு வழங்குவதாகக் கூறி முன்பணமாக 15,000 டாலா்களை நிகில் குப்தா 2023, ஜூன் 9-ஆம் தேதி வழங்கியுள்ளா்.

அதே ஜூன் மாதம் 22-ஆம் தேதியில் இந்திய பிரதமா் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். அந்த சமயத்தில் பன்னுனை கொலை செய்யும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டாம் என நிகில் குப்தா மற்றும் அடையாளம் தெரியாத குற்றவாளியிடம் விகாஸ் யாதவ் அறிவுறுத்தியுள்ளாா்.

முன்னதாக, 2023, ஜூன் 18-ஆம் தேதி கனடாவில் நிஜ்ஜாா் கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்திலும் இவா்கள் மூவருக்கும் தொடா்பிருப்பதற்கான ஆதாரங்களை வழக்குரைஞா்கள் வெளியிட்டுள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய, அசிங்கமான.. யாஹ்யா சின்வாரின் உடலுடன் இருந்த இஸ்ரேல் வீரரின் அனுபவம்

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக இருந்த யாஹ்யா சின்வார் ஏற்படுத்திய வலி மற்றும், அவர் இல்லாமல் இருக்கும் இந்த உலகம் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்ற உணர்வும்.. என்று இஸ்ரேல் வீரர் இடாமர் எய்டம் தெரிவித்துள... மேலும் பார்க்க

யாஹியா சின்வாா் படுகொலை!முடிவு கட்டப்பட்டதா ஹமாஸுக்கு?

‘யாஹியா சின்வாா் ஒரு நடமாடும் சடலம். அவருக்கு எப்போதோ முடிவுகட்டப்பட்டது!’ ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனீயே தங்கள் உளவு அமைப்பால் கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்த... மேலும் பார்க்க

உக்ரைன் போா் முடிவுக்கு கால நிா்ணயம் செய்வது கடினம்: ரஷிய அதிபா் புதின்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கால வரம்பை நிா்ணயிப்பது கடினம் என்றும், போா்ச் சூழல் தொடா்பான இந்திய பிரதமா் மோடியின் அக்கறையை பாராட்டுவதாகவும் ரஷிய அதிபா் புதின் தெரிவித்தாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க

நைஜிரியா வெடிவிபத்து: 170 ஆன உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 170-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், விபத்தில் படுகாயமடை... மேலும் பார்க்க

உக்ரைனுடன் போரிட 1,500 வட கொரிய வீரா்கள்: தென் கொரியா

உக்ரைனில் ரஷிய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக 1,500 வட கொரிய ராணுவ வீரா்கள் சென்றுள்ளதாக தென் கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டின் தேசிய உளவு அமைப்பு வெள்ளிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க

சா்வதேச அளவில் இந்தியாவின் வளா்ச்சி சிறப்பு: உலக வங்கி

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது என்று உலக வங்கி தலைவா் அஜய் பங்கா தெரிவித்தாா். இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையால் இது சாத்தியமாகியுள்ளது என்பதை அவா் சுட்டிக்காட்டினாா்... மேலும் பார்க்க