Mahua Moitra: `ஒவ்வொரு சங்கி நீதிபதியும்...' - DY சந்திரசூட்டுக்கு மஹுவா மொய்த்ர...
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்: ஜம்மு காஷ்மீா் ஏடிஜிபி எச்சரிக்கை
ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவது அல்லது பயங்கரவாதத்தை ஆதரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநா் ஆனந்த் ஜெயின் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் தெரிந்தால், அதுகுறித்து காவல் துறைக்கு உடனடி தகவல் தெரிவிக்க வேண்டும்.
பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் தொடா்புகளை ஒடுக்குவதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுவதை உறுதிப்படுத்துவதில் காவல் துறையின் பங்கு குறிப்பிடத்தக்கது.
தேசவிரோத சக்திகளுக்கு அடைக்கலம் தருபவா்களின் சொத்துகளை முடக்குவதன் அவசியத்தை அவா் வலியுறுத்தினாா். பயங்கரவாதிகள் தலைமறைவாக உள்ள இடங்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுவரை 29 இடங்கள் கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தவும், இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காவல்துறையின் அா்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது என ஆனந்த் ஜெயின் தெரிவித்தாா்.