செய்திகள் :

பல மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு நேரடி நெருக்கடி தந்த அமெரிக்கா - அது என்ன?

post image

'பேச்சுவார்த்தைகள் எதுவும் சரியாக போகவில்லை' என்று ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடக்கவிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது.

உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் - ரஷ்யா போர்

கட்டுப்பாடுகள்...

இந்த நிலையில், நேற்று இரண்டு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான வர்த்தகத் தடைகளை விதித்திருக்கிறது அமெரிக்கா.

இதனால், இந்த நிறுவனங்களிலிருந்து எண்ணெய்‌ வாங்கும் உலக நாடுகளுக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.

ரஷ்ய - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில், புதின் நேர்மையானவராக இல்லை என்று இதற்குக் காரணமாக அமெரிக்க கருவூல செயலர் ஸ்காட் பெசன்ட் கூறுகிறார்.

இன்னமும் ரஷ்யாவின் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். இப்போது விதிக்கப்பட்டுள்ள தடை மிகப்பெரிய தடை என்றும் கூறுகிறார்.

இந்த எண்ணெய் நிறுவனங்கள் மூலம் ரஷ்யா நடத்தும் போருக்கு நிதி செல்கிறது. இந்தத் தடை மூலம் அந்த நிதிக்கு ஓரளவு நெருக்கடிகளைத் தரலாம் என்று அமெரிக்க தரப்பு கூறுகிறது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு...

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து ரஷ்யா மீது எந்தவொரு தடையும், வரியும் நேரடியாக விதிக்கப்படவில்லை.

ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் இந்தியா, பிரேசில் நாடுகளுக்கு தான்‌ கூடுதல் வரியை விதித்தது அமெரிக்கா.

இதுவே ரஷ்யாவின் மீதான முதல் மற்றும் மிகப்பெரிய அடி. இதற்கு ரஷ்யா எப்படி எதிர்வினையாற்றுமோ?

`2.5 மில்லியன் இந்தியர்களின் பெருமூச்சு' - கஃபாலா சட்டத்தை ரத்து செய்த சவூதி இளவரசர்!

வெளிநாட்டு மோகம்விரைவில் பணக்காரனாக வேண்டும், கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக 1970, 80, 90-களில் வெளிநாட்டுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.குறிப்பாக வளைகுடா நாடுகளான ... மேலும் பார்க்க

ரூ.13,000 கோடி கடன் மோசடி: வைர வியாபாரி மெஹுல் சோக்சிக்காக சகல வசதியுடன் தயாராக இருக்கும் சிறை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப கொடுக்காமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர் வெவ்வேறு நாடுக... மேலும் பார்க்க

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு‌ அமெரிக்கா தடை: பாதிக்கும் ரிலையன்ஸ்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி'இனி இந்தியா மெல்ல மெல்ல ரஷ்ய எண்ணெய் வாங்குவதைத் குறைக்கும்' - இது கடந்த இரண்டு - மூன்று நாள்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கும் ஒன்று.இன்னொரு பக... மேலும் பார்க்க

வம்பிழுத்த ‘இன்பமான’ எம்.பி; வறுத்தெடுத்த தலைமை டு இடத்தை மாற்றிய கதைசொல்லியார்! | கழுகார் அப்டேட்ஸ்

கடுப்பில் சூரியக் கட்சி நிர்வாகிகள்!சுயநலத்தால் தொகுதியைத் தாரைவார்க்கும் ‘சாமி’ சீனியர்..?தேர்தல் நேர உள்ளடிகள், பின்னலாடை மாவட்டச் சூரியக் கட்சிக்குள் தற்போதே சூட்டைக் கிளப்பியிருக்கிறது. அந்த மாவட்... மேலும் பார்க்க

`இப்போதுகூட வேகமாக நடக்கவில்லை'- கொள்முதல் அலட்சியம்; தேங்கிக் கிடக்கும் நெல்; துயரில் விவசாயிகள்

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். குறித்த நேரத்தில் மேட்டூர் திறக்கப்பட்டது, போதுமான அளவில் விவசாயத்திற்... மேலும் பார்க்க

இந்திய-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் இழுபறி; பியூஷ் கோயல் பயணம் வெற்றியைத் தருமா?

இந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது... பதினான்காவது கட்ட பேச்சுவார்த்தை முடிந்தும், இன்னும் அதில் இழுபறி நீடித்து வருகிறது.என்ன பேச்சுவார்த்தை?இந... மேலும் பார்க்க