``ஏ.ஆர் ரஹ்மான் மகளுக்கும் எனக்கும் ஒரே வயது!'' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வ...
பஸ்தரில் மீண்டும் அமைதி திரும்பியுள்ளது: சத்தீஸ்கர் முதல்வர்
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 நக்சல்கள் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்.
கொரஜ்குடா, தாண்டேஸ்புரம், நகரம் மற்றும் பந்தர்பதார் ஆகிய கிராமங்களின் வனப்பகுதியில் நக்சல்களின் கோண்டா மற்றும் கிஸ்டாரம் பகுதி குழுக்களைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பெஜ்ஜி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப்பதியில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் கூட்டுக்குழு ஒன்றிணைந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பத்து நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்துள்ளார்.
மேலும், சம்பவ இடத்தில் ஐஎன்எஸ்ஏஎஸ் ரக துப்பாக்கி, ஏகே 47 ரக துப்பாக்கி, ரைபிள் (எஸ்எல்ஆர்) உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறுகையில்,
பஸ்தர் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது, வளர்ச்சியை எளிதாக்குவது மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது அரசின் முன்னுரிமை.
பஸ்தரில் மக்களின் வளர்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது மாநில அரசின் முதன்மையான முன்னுரிமையாகும். அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் சகாப்தம் பஸ்தாருக்கு திரும்பியுள்ளது.
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் ஒழிக்கப்படுவது உறுதி என்று பாதுகாப்புப் படையினரின் அசாத்திய துணிச்சலுக்கும், அர்ப்பணிப்பிற்கும் முதல்வர் பாராட்டுத் தெரிவித்தார்.
மார்ச் 2026க்குள் சத்தீஸ்கரில் இருந்து நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ணயித்த இலக்கை நிறைவேற்றத் திட்டமிட்ட வகையில் முன்னேறி வருகிறோம் என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்துடன், சுக்மா உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் தனித்தனி துப்பாக்கிச்சூட்டுகளைத் தொடர்ந்து இந்தாண்டு இதுவரை 207 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.