செய்திகள் :

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: அவரகால மைய எண்கள் அறிவிப்பு!

post image

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று(நவ. 26) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு சார்பில் அவரகால மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.

இதன்காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (நவ.26) அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கனமழையினை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன-

22.11.2024 மற்றும் 25.11.2024 ஆகிய தேதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத் துறை இயக்குநருக்கும், கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு 23.11.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டு, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகளில், 1192 படகுகள் கரை திரும்பியுள்ளன.

மேலும், ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்குச் செல்ல ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட 

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப.,  (94999 56205, 88006 56753)

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கவிதா ராமு, இ.ஆ.ப., (90032 97303)

திருவாரூர் மாவட்டத்திற்கு காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப., (73388 50002)

கடலூர் மாவட்டத்திற்கு எஸ்.எ. ராமன், இ.ஆ.ப., (94458 83226) ஆகிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.

இதையும் படிக்க: சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து! தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

இது தவிர, தேவைக்கேற்பட சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளன.

மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் மூலம், கனமழை எச்சரிக்கை வரப்பெற்ற மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் 5 நாள்களுக்கு பலத்த மழை!

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.மழை நிலவரங்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மென் என்று அ... மேலும் பார்க்க

நாகையில் இருந்து 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, நாகைக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த... மேலும் பார்க்க

குடும்பத் தகராறு: இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை!

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நெய்யமலை அக்கரைப்பட்டி கிராமத்தில் குடும்பத்தகராறில் மனம் உடைந்த கர்ப்பிணிப்பெண், தனது இரு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்வரத்து 4936 கன அடியாக குறைந்தது.காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் இன்று(நவ. 26) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,395 கன அடியிலிருந்து வினாட... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

நெஞ்சுவலி காரணமாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பார்க்க