செய்திகள் :

சென்னை, புறநகரில் 5 நாள்களுக்கு பலத்த மழை!

post image

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மழை நிலவரங்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மென் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளதாவது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் 1-2 மணி நேரங்களில் மழை தொடங்கவுள்ளது. இது 4-5 நாள்களுக்கு மழை நீடிக்கும்.

டெல்டா(நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர்) மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று அதி கனமழையை எதிர்பார்க்கலாம். கடலூர், பாண்டிச்சேரியிலும் கனமழை பெய்யும்.

இதையும் படிக்க: நாகையில் இருந்து 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம்!

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கைக்கு கீழே உள்ளது. இது வடக்கு நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

மிகவும் மெதுவாக நகர தொடங்கியுள்ளதால், கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் அதன் புறநகரில் இன்றிலிருந்து 4-5 நாள்களுக்கு டிசம்பர் 1 வரை மழை நீடிக்கும்.

சென்னையில் நவ. 27 ஆம் தேதியில் இருந்து பலத்த மழை பெய்யத் தொடங்கவுள்ளது. தாழ்வு மண்டலமானது சென்னக்கு கிழே கரையை கடக்கும்போது, வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை நோக்கி மழை மேகக் கூட்டங்கள் நெருங்கி வந்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் கன முதல் மிக கனமழை பெய்யவுள்ளது. இன்று முதல் டிசம்பர் 1 ஆம் தேதி பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று(நவ. 26) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் கொளத்தூர், பெரம்பூர், கோயம்பேடு, எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.... மேலும் பார்க்க

அரசியலமைப்பு நாள்: முதல்வர், அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்பு!

அரசியலமைப்பு நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அரசியலமைப்பு முகவுரையை வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்ட நாளான நவ. 26 ஆம் தே... மேலும் பார்க்க

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

ராஜிநாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே!

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ராஜிநாமா செய்துள்ளார். மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

நாகையில் இருந்து 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, நாகைக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த... மேலும் பார்க்க