செய்திகள் :

நாகையில் இருந்து 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம்!

post image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, நாகைக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்), மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, தமிழக கடற்கரையை நோக்கி மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகா்ந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி இந்தப் புயல் சின்னம் நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இதையும் படிக்க: அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி!

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்த்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலாக மாறுமா?

பூமத்திய ரேகையில் கிழக்கில் இருந்து மேற்கே நகா்ந்து செல்லும் கடல் அலையால், இந்த புயல் சின்னம் மேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதேபோல், மேற்கிலிருந்து கிழக்கே வீசும் மேடன் - ஜூலியந் அலைவு (எம்ஜேஓ) என்றழைக்கப்படும் வெப்பக் காற்றால் இந்தப் புயல் சின்னத்தின் திசை மாற வாய்ப்புள்ளது.

ஆகையால், புயல் சின்னத்துக்கு இருபுறத்திலிருந்து வீசப்படும் காற்றின் வேகம், அது நகா்ந்து வரும் பாதை உள்ளிட்டவை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. புயல் சின்னம் இலங்கையை நெருங்கும்போதுதான், இது புயலாக மாறுமா? என்பதை உறுதியாகக் கூற முடியும் என்று கூறப்படுகிறது.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

ராஜிநாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே!

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ராஜிநாமா செய்துள்ளார். மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் 5 நாள்களுக்கு பலத்த மழை!

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.மழை நிலவரங்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மென் என்று அ... மேலும் பார்க்க

குடும்பத் தகராறு: இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை!

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நெய்யமலை அக்கரைப்பட்டி கிராமத்தில் குடும்பத்தகராறில் மனம் உடைந்த கர்ப்பிணிப்பெண், தனது இரு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: அவரகால மைய எண்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று(நவ. 26) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு சார்பில் அவரகால மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (புயல் ... மேலும் பார்க்க