விரைவில் வருகிறது க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டை! பெறுவது எப்படி?
க்யூ ஆர் கோடு கொண்ட பான் அட்டைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தற்போது பயன்பாட்டில் உள்ள பான் அட்டைகளுக்கு மாற்றாக, மேம்படுத்தப்பட்ட பான் கார்டு அறிமுகப்படுத்தும் பணியை மத்திய அரசு விரைவாகத் தொடங்கவிருக்கிறது.
தற்போது நிரந்தர கணக்கு எண் ( பான் ) என்பது பத்து இலக்கங்களைக் கொண்ட எழுத்து மற்றும் எண்களைக் கொண்ட அதாவது எண்ணெழுத்து அடையாள அட்டையாக பயன்பாட்டில் உள்ளது. இது இந்திய வருமான வரித் துறையால் விண்ணப்பிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், பல ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருக்கும் பான் அட்டையை புதுப்பித்து, க்யூஆர் கோடு கொண்ட பான் 2.0 என்ற திட்டத்தை வருமான வரித்துறையினர் செயல்படுத்துவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்தியக் குழு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1,435 கோடி ஒதுக்கப்பட்டுளள்து.
இந்திய அரசின் இந்த முன்முயற்சியானது தற்போதைய வரி செலுத்துவோர் பல்வேறு வரி விவரங்களின் பதிவு முறையை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் மாற்றியமைத்து, முழு செயல்முறையையும், சாதாரண மக்களுக்கும் எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.