வேலூர்: பாலியல் அத்துமீறலால் கர்ப்பமடைந்த சிறுமி - இளைஞனுக்கு 20 ஆண்டுகள் சிறை
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகேயுள்ள வெள்ளூர் கிராமம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (26).
கடந்த 2022-ம் ஆண்டு, வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகேயுள்ள ஒரு பகுதியில் செங்கல் சூளையில் வேலைச் செய்துவந்த தமிழ்ச்செல்வன், 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், அந்த சிறுமி கர்ப்பமடைந்திருக்கிறார். இது குறித்து தெரியவந்ததும் அதிர்ச்சிக்குள்ளான சிறுமியின் தாய், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வன் மீது புகாரளித்தார். `போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்த போலீஸார், தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (நவம்பர்-25) தீர்ப்பு அளிக்கப்பட்டது. பாலியல் குற்றம் நிரூபணமானதால், தமிழ்ச்செல்வனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்த தவறினால், கூடுதலாக மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தமிழ்ச்செல்வன் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...