டிஜிட்டல் அரெஸ்ட்... மிரட்டல்... மோசடிக் கும்பலிடம் ஒரு மாதத்தில் ரூ.4 கோடியை இழ...
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்வரத்து 4936 கன அடியாக குறைந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் இன்று(நவ. 26) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,395 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,936 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க: நாகைக்கு அருகே புயல் சின்னம்: டெல்டா மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109. 52 அடியிலிருந்து 109. 71 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 77. 99 டிஎம்சியாக உள்ளது.