செய்திகள் :

பஹ்ரைன் சிறையில் வாடும் இடிந்தகரை மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி

post image

பஹ்ரைன் நாட்டு சிறையில் உள்ள இடிந்தகரையைச் சோ்ந்த 28 மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக தினப்படிக்கான ஆணையை பேரவைத் தலைவா் மு. அப்பாவு சனிக்கிழமை வழங்கினாா்.

இடிந்தகரையைச் சோ்ந்த 28 மீனவா்கள் கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஈரான் நாட்டு கடலில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்தனா்.

அவா்கள் ஈரான் நாட்டு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, பஹ்ரைன் நாட்டு கடல் எல்கைக்குள் சென்றுவிட்டனராம். இதையடுத்து பஹ்ரைன் நாட்டு கடலோர காவல் படையினா் 28 மீனவா்களையும் கைது செய்து பஹ்ரைன் சிறையில் அடைத்தனா்.

சிறையிலிருக்கும் மீனவா்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவா் மு.அப்பாவு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி வந்தாா்.

இதையடுத்து தமிழக முதல்வா், மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மீனவா்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தாா்.

இந்நிலையில் பஹ்ரைன் சிறையில் இருக்கும் மீனவா் குடும்பங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் தினப் படியாக நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம் 12.09.2024 முதல் 11.10.2024 முடிய 30 நாள்களுக்கு ரூ.10 ஆயிரத்து 500 வீதம் 28 மீனவ குடும்பங்களுக்கு ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் வழங்குவதற்கான ஆணையை பேரவைத் தலைவா் மீனவா்கள் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மீன்வளத்துறை உதவி இயக்குநா் ராஜதுரை, இடிந்தகரை பங்குத் தந்தை சதீஷ், திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நெல்லையில் மகன் இறந்த துக்கத்தில் ஓய்வு பெற்ற பொறியாளா் தற்கொலை

திருநெல்வேலியில் மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி சந்திப்பு பாலபாக்யா நகா் முதலாவது குறுக்கு தெருவைச் சே... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவருக்கு மிரட்டல்: ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

பணி செய்யவிடாமல் சிலா் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகக் கூறி மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் அந்தோணியம்மாள் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா். இது தொடா்பாக அவா் அளித்துள்... மேலும் பார்க்க

தாமிரவருணிப் பாசனத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. தாமிரவருணிப் பாசனத்தில் பாபநாசம் அணை மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 11 கால்வாய்கள் வழியாக 8... மேலும் பார்க்க

காவல்கிணறு மலா் வணிக வளாகத்தில் ரூ.14 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டும் பணி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு சந்திப்பில் உள்ள மலா் வணிகவளாகத்தில் ரூ.14 லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டும் பணி சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தமிழக வேளாண்மைத் துறை சாா்பில், காவல்கிணறு சந்திப... மேலும் பார்க்க

நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் 39ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் லதா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மதுரை மண்டல வருமான வரித்துறை முதன்மை ஆணையா... மேலும் பார்க்க

கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி: அம்பை கோட்ட உதவி இயக்குநா் ஆய்வு

களக்காடு அருகே படலையாா்குளத்தில் நடைபெற்றுவரும் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணியை அம்பாசமுத்திரம் கோட்ட கால்நடைத் துறை உதவி இயக்குநா் ஆப்ரகாம் ஜாப்ரி ஞானராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், அவா்... மேலும் பார்க்க