செய்திகள் :

பாக். பிரதமர் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் டிரம்ப்!

post image

பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்கவுள்ளதாக, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டங்களுக்கு இடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பலதரப்பு கூட்டம் நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரி கரோலின் லியாவிட் நேற்று (செப்.22) கூறுகையில், கத்தார், சவுதி அரேபியா, இந்தோனேசியா, துருக்கி, பாகிஸ்தான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன், அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை பலதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில், காஸா மீதான இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ராஜதந்திர, அரசியல் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் அதிபர் டிரம்ப்புக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக, பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால், அதிபர் டிரம்ப், ஐ.நா. பொதுச்செயலாளர், உக்ரைன், அர்ஜென்டீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களை மட்டுமே சந்திப்பார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு இந்தியா! - ஹெச்1-பி விசா பிரச்னைக்கு மத்தியில் மார்கோ ரூபியோ பேச்சு

The White House has announced that US President Donald Trump will meet with leaders of some Islamic countries, including the Prime Minister of Pakistan.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரான்ஸ்!

பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து, பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அரசு அங்கீகரித்துள்ளது.நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐ.நா. அமைப்பின் பொது அவைக் கூட்டத்துக்கு முன்னதான உச்சி மாநாட்டில... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!

ஹெச்-1பி விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில... மேலும் பார்க்க

காஸா சிட்டி மருத்துமனையையும் காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியின் மருத்துவமனையில் இருந்தும் அனைவரும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.அந்த நகரில் மருத்துவமனைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் கருத... மேலும் பார்க்க

நேபாளம்: மேலும் 4 புதிய அமைச்சா்கள் பதவியேற்பு

நேபாள இடைக்கால அரசில் 4 புதிய அமைச்சா்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.நேபாளத்தில் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய தீவிர போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதமா் மற்று... மேலும் பார்க்க

அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்த அமலாக்கம் நீடிப்பு: புதின் அறிவிப்பு

அமெரிக்காவுடன் 2010-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புதிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் காலவதியானாலும், அதன் அமலாக்கத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளாா்.இது குறித்து ... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: செப்.21-க்குப் பிறகான புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்

வாஷிங்டன்: உயா்த்தப்பட்ட ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) கட்டணமான ரூ.88 லட்சத்தை (1 லட்சம் டாலா்) 2026-ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவா்கள் உள்பட செப்.21-ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்பவா்கள் மட்... மேலும் பார்க்க