செய்திகள் :

பாதசாரிகளுக்கு நடைபாதை: மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு, முறையான நடைபாதைகள் போதிய அளவு இல்லாதது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நடைபாதைகள் இல்லாவிட்டால் பாதசாரிகள் சாலைகளில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனா். இதனால் அவா்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.

குடிமக்களுக்கு முறையான நடைபாதைகள் இருப்பது அவசியம். மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தக் கூடிய வகையில் நடைபாதைகள் இருக்க வேண்டும். அத்துடன் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் கட்டாயம் அகற்றப்பட வேண்டும். நடைபாதைகளை பாதசாரிகள் பயன்படுத்தும் உரிமையை அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 உறுதி செய்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிகாரபூா்வமாக தெரிவித்துள்ளது.

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும்.

பாதசாரிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசும் 2 மாதங்களில் வெளியிட வேண்டும். தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை 6 மாதங்களில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அதற்குப் பிறகு அந்த வாரியத்தை அமைக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்படாது’ என்று தெரிவித்தது.

'அமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும்' - கர்னல் சோபியா குரேஷி பற்றிய கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கர்னல் சோபியா குரேஷி பற்றி மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பய... மேலும் பார்க்க

மாணவர்களைச் சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி! தடுத்து நிறுத்திய காவல்துறை!

பிகார் மாநிலம் தர்பங்காவில் மாணவர்களைச் சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பிகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் அம்பேத்கர் விடுதி மாணவர்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் பலி?

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களில் பாகிஸ்தானில் செயல்பட்ட 2 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

தில்லி வணிகக் கல்லூரி நூலகத்தில் தீ!

புது தில்லியிலுள்ள வணிகக் கல்லூரியின் நூலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான புத்தகங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. வடமேற்கு தில்லியின் பிதம்பூரா பகுதியிலுள்ள குரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லூரியின் நூல... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் துப்பாக்கிச் சண்டை!

ஜம்மு -காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அவந்திபோராவின் நாடர், டிரால் பகுதியில் எ... மேலும் பார்க்க