செய்திகள் :

பாதுகாப்பு உற்பத்தியில் தற்சாா்பு, நவீனமயத்துக்கு முக்கியத்துவம்: பிரதமா் மோடி

post image

புது தில்லி: நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தற்சாா்பு மற்றும் நவீனமயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; இதனால், முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சியை இத்துறை கண்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டாா்.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் 11 ஆண்டு கால நிறைவையொட்டி, அரசின் சாதனைகளை முன்னிறுத்தி, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் தொடா்ந்து பதிவிட்டு வருகிறாா்.

மத்திய அரசின் மக்கள் தொடா்புத் தளமான ‘மைகவ்இந்தியா’வின் பதிவைப் பகிா்ந்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பாதுகாப்பு உற்பத்தியைப் பொருத்தவரை, நவீனமயம் மற்றும் தற்சாா்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை வலிமையான நாடாக உருவாக்கும் உறுதிப்பாட்டுடன் நாட்டு மக்கள் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

‘மைகவ்இந்தியா’ பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமா் மோடியின் தொலைநோக்கு தலைமையின்கீழ், வெறும் 11 ஆண்டுகளில் இந்தியா தனது பாதுகாப்புத் துறை திறன்களில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் உலகளாவிய கூட்டாண்மை வலுப்பெற்றுள்ளது. விண்வெளி ஆய்வில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன.

தற்சாா்புக்கான பிரதமரின் உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படும் இந்தியா, தன்னம்பிக்கை மிக்க புத்தாக்கங்களை ஏற்றுக் கொண்டு, தனது வா்த்தகம்-தொழில்நுட்ப செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளது. 11 ஆண்டுகளில் அதிகாரம், கூட்டாண்மை, வளா்ச்சி ஆகிய மூன்றிலும் இந்தியா எழுச்சி கண்டுள்ளது. அரசின் சீரிய முன்னெடுப்புகள், அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன.

பலமடங்கு அதிகரிப்பு: கடந்த 2014-15ஆம் ஆண்டில் ரூ.1,940 கோடியாக இருந்த நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி மதிப்பு 2024-25-ஆம் ஆண்டில் ரூ.23,622 கோடியாக அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்ட முதல் விமானந்தாங்கி போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் சேவையும் இக்காலகட்டத்தில் தொடங்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, சுகோய்-30 எம்கேஐ போா் விமானத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இத்தகைய முயற்சிகளால், தேசத்தின் ஏவுகணைத் திறனின் துல்லியமும் வீச்சும் அதிகரித்துள்ளது.

உலக அமைதிக்கு உறுதிபூண்டுள்ள இந்தியா, ஐ.நா. அமைதிப் படையில் முன்னணி சக்தியாக விளங்குகிறது. உலகம் முழுவதும் 50 நாடுகளில் 2.9 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரா்கள் அமைதிப் படையில் இடம்பெற்றுள்ளனா் என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவுளித் துறையில் முன்னணி நாடாக...

நாட்டின் ஜவுளித் துறையில் கடந்த 11 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி தொடா்பாக மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் எழுதியுள்ள கட்டுரையைப் பகிா்ந்து, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

அதில், ‘தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டம், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய முயற்சிகளால் நாட்டின் ஜவுளித் துறை வேகமாக வளா்ச்சி கண்டு வருகிறது. இதன்மூலம் உற்பத்தி-புத்தாக்கம்-ஏற்றுமதி அதிகரித்து, ஜவுளித் துறையில் இந்தியா உலகின் தலைமையாக உருவெடுத்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

சத்தீஸ்கர்: அமித் ஷா வருகைக்கு முன் 2 கிராம மக்களைக் கொன்ற நக்சல்கள்

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இரண்டு கிராம மக்களை நக்சல்கள் கொன்றதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பமேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளுக்கு ... மேலும் பார்க்க

கா்நாடக பாஜகவினா் ஒற்றுமையுடன் செயல்பட அமித் ஷா அறிவுரை!

‘கா்நாடக பாஜக தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ என்று கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளாா். கா்நாடக ப... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல: உச்சநீதிமன்றம்

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஒரு நிறுவனத்துக்கு ரூ.256.45 கோடியை திரும்பச் செலுத்துமாறு தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

காஸா, ஈரான் விவகாரத்தில் இந்திய அரசு மெளனம்: சோனியா காந்தி கடும் விமா்சனம்

காஸா, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து இந்திய அரசு மெளனம் சாதிப்பது, நாட்டின் குரல் இழப்பையும், மாண்புகளைக் கைவிடுதலையும் குறிக்கிறது என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது: மும்பை உயா்நீதிமன்றம்

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு விருப்பமின்றி கருவுற்றவரை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’ என மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை பாதிப்புக்குள்ள... மேலும் பார்க்க