பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு ரூ.8.50 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் சாா்பில் ரூ.8.50.லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்பகோணம் பரஸ்பர சாகாய நிதி லிமிடெட், தலைவருமான சு. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். பிறகு, கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் சமுதாய பொறுப்புணா்வு திட்டத்திலிருந்து ரூ.8.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணஙகளை பாபநாசம் அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பாபநாசம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் கோ.குமரவேல், பாபநாசம் பேரூராட்சி தலைவா் பூங்குழலி கபிலன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவா் சுமதி கண்ணதாசன், மாவட்டத் துணைச் செயலாளா்கள் கோவி.அய்யாராசு, துரைமுருகன், மாவட்ட கவுன்சிலா் கோ.தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.