செய்திகள் :

பாலத்தில் காா் மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாலத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

பெங்களூரு, கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியில் வசித்து வந்தவா் பேட்ரிக் (50). இவா், தனது மனைவி நித்திகா (43), மகள் ஆதியா (17), சித்தப்பா உன்னி கிருஷ்ணன் (79), சித்தி கங்கா லட்சுமி (68) ஆகியோருடன் வேளாங்கண்ணிக்கு காரில் சென்றாா். காரை பேட்ரிக் ஓட்டினாா்.

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் காவல் சரகம், சாத்தப்பாடி அருகே சனிக்கிழமை காலை சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், பாலத்தின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், கங்காலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மற்றவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தி மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செல்லும் வழியில் பேட்ரிக் உயிரிழந்தாா்.

நித்திகா, ஆதியா, உன்னி கிருஷ்ணன் ஆகியோருக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இறந்த கங்காலட்சுமியின் சடலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கும், பேட்ரிக்கின் சடலம் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து, கம்மாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தடுப்புக் காவலில் ரௌடி கைது

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடி தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தூக்கணாம்பாக்கம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜாராம் மற்றும் போலீஸாா் கட... மேலும் பார்க்க

கொலை வழக்கில் லஞ்சம்: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்; விழுப்புரம் டிஐஜி நடவடிக்கை

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே நிகழ்ந்த கொலை வழக்கிலிருந்து ஊராட்சி மன்றத் தலைவரின் மகனை விடுவிப்பதற்கு லஞ்சம் பெற்ாக காவல் ஆய்வாளரை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி உத்தர... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், இருவா் கைது செய்யப்பட்டனா். கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகு... மேலும் பார்க்க

ரூ.4 கோடியில் அரசுக் கட்டடங்கள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

சிதம்பரம் வட்டம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் குமராட்சி வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடி மதிப்பிலான அரசுக் கட்டடங்களை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை திறந்து வைத்த... மேலும் பார்க்க

உறுப்புகள் தானம்: ஓட்டுநரின் உடலுக்கு அரசு மரியாதை

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. நெய்வேலியை அடுத்த பெருமாத்தூா் ஊராட்சி மாற்றுக் குடியிருப்பில் வசித்து வந்தவா்... மேலும் பார்க்க

முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி!

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள வீராணம் ஏரி 3-ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. இதனை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காட்டுமன்ன... மேலும் பார்க்க