செய்திகள் :

பாலியல் ரீதியாக கொடுமைபடுத்திய தந்தை; எரித்துக் கொன்ற 'மகள்கள்' - பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!

post image

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தங்களது தந்தையை எரித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

லாகூரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகல் சோக் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

காவல்துறையினர் கூறுவதன்படி, 48 வயதான அலி அக்பர் என்ற நபர் 3 திருமணங்கள் செய்துள்ளார். அவருக்கு 10 குழந்தைகள் உள்ளனர். அவரது முதல் மனைவி இறந்த நிலையில், இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வசித்துவருகிறார்.

பி.டி.ஐ. செய்தி முகமை கூறுவதன்படி, கடந்த ஜனவரி 6-ம் தேதி அக்பர் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது 12 மற்றும் 15 வயதான இரு மகள்கள் அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

Sexual Harassment (Representational Image)

பலத்த தீக்காயத்தால் அவதிப்பட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

மகள்கள் இருவரும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். அவர்களை அலி அக்பர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறியிருக்கின்றனர்.

"அவர் எங்களை பாலியல் ரீதியாக கொடுமைபடுத்தியதால் நாங்கள் இருவரும் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டோம். அவரது வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து அவர் மீது தெளித்து நெருப்பைப் பற்ற வைத்தோம்" எனக் கூறியுள்ளனர்.

கொலை வழக்கு பதியும் முன் இறந்த நபரின் இரண்டு மனைவிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கூகுள் மேப்பை நம்பிச் சென்ற போலீஸ் குழு; தாக்கி சிறைபிடித்த நாகலாந்து உள்ளூர்வாசிகள்; நடந்தது என்ன?

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் குழு ஒன்று, கூகுள் மேப்பின் (Google Map) தவறான வழிகாட்டுதலால் வழி தவறி வேறு இடத்துக்குச் சென்று, அப்பகுதி மக்களால் தாக்குதலுக்குள்ளான சம்பவம் வெளியில் தெரியவந்திருக்... மேலும் பார்க்க

31 நாய்கள்; பாலத்தின் மேலிருந்து தூக்கிவீசப்பட்டதில் பறிபோன 20 உயிர்கள்... தெலங்கானா கொடூரம்!

தெலங்கானா மாநிலத்தின் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தின் மேலிருந்து 31 நாய்கள் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டத்தில்... மேலும் பார்க்க

Boby Chemmanur: நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகாரில் போபி செம்மண்ணூர் கைது; அடுத்த நடவடிக்கை என்ன?

கேரளாவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஹனி ரோஸ். இவர் நகைக்கடை திறப்பு விழாவுக்குச் சென்றபோது தொழில் அதிபர் போபி செம்மண்ணூர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த சில நாட்களாகக் குற்றம்சாட்டி வருகிறார்.தொழில் அ... மேலும் பார்க்க

வேலூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு... திமுக ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 4 பேர் மீது `குண்டாஸ்’

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட கீழ்ஆலத்தூர், நாகல் கிராமம் சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்தவர் விட்டல் குமார் (47).பா.ஜ.க ஆன்மிகப் பிரிவின் வேலூர் மாவட்டச் செயலாளராகப் பொற... மேலும் பார்க்க

ராஜபாளையம்: 'என் தற்கொலைக்கு காரணம் போலீஸ்'- கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த மாற்றுத்திறனாளி

மது விற்கச் சொல்லி தொந்தரவு அளித்ததாலும், தகாத வார்த்தைகளால் போலீஸ் திட்டியதாலும் மனம் உடைந்து தற்கொலை செய்வதாக மாற்றுத்திறனாளி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், ராஜபாளைய... மேலும் பார்க்க

சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இன்ஸ்பெக்டர், அதிமுக பிரமுகர் சிக்கிய பின்னணி!

சென்னை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக... அவரின் பெற்றோர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அப்போது அங... மேலும் பார்க்க