தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
பால்கனி இடிந்து விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ஆட்டோ!
சென்னை: சென்னை பெரம்பூரில் 70 ஆண்டு பழமையான வீட்டின் முதல் மாடி பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது.
சென்னை பெரம்பூர் தீட்டித் தோட்டம் 7 ஆவது தெருவில் வசித்து வருபவர் பாபு மன்சூர். முதல் தளத்துடன் கூடிய இவருக்குச் சொந்தமான 70 ஆண்டுகள் பழமையான வீடு உள்ளது. இந்த வீட்டில் தான் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், செவ்வாய்கிழமை மாலை திடீரென வீட்டின் முதல் தளத்தின் பால்கனி திடீரென பயங்கர சப்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது, வீட்டின் கீழே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது சுவர்கள் விழுந்ததால் ஆட்டோ அப்பளம் போல் நொறுகியது.
இதையும் படிக்க:வேலூர் அருகே லாரி மீது ஜீப் மோதி 3 பேர் பலி
பின்னர், தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
போலீசார் பழமை வாய்ந்த கட்டடத்தை சீர் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வீட்டில் உரிமையாளருக்கு தெரிவித்ததுடன், சேதமடைந்த ஆட்டோவை பழுது பார்க்க கூறி சமரசம் பேச்சு வார்த்தைக்கு பிறகு வீட்டின் உரிமையாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இருவரும் உடன்பட்டனர்.
பால்கனி இடிந்து விழுந்தது மாலை நேரமாக இருந்தாலும், அந்த பகுதியில் யாரும் இல்லாததாலும் அதிா்ஷ்டவசமாக உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.