செய்திகள் :

பின்தங்கிய மாணவா்களுக்கு கல்விக் கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன: சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி

post image

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான கல்வியை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட, சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்விக் கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நிகழாண்டு ஒருங்கிணைந்த ஐஐடி சோ்க்கையை நடத்திய சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கூறுகையில், ‘ஜேஇஇ நுழைவுத் தோ்வு அடிப்படையிலான ஐஐடி சோ்க்கையில் விண்ணப்ப நிலையிலிருந்து கட்டண விலக்கு மற்றும் கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தின்போது எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவா்கள் பாதி தோ்வுக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.

தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைத்து தகுதியான மாணவா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐஐடி சோ்க்கையை உறுதி செய்வதற்காக குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். இதில் எஸ்சி, எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு 50 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களின் அதிக எண்ணிக்கையிலான சோ்க்கையை உறுதிப்படுத்த ‘கட்-ஆஃப்’ தளா்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தாலும் மற்றொரு தகுதியான இடஒதுக்கீடு பிரிவினருக்கு வழங்கப்படுவதில்லை. தோ்ச்சிக்கு வேண்டிய கட்-ஆஃப்பை விட குறைவான மதிப்பெண்களைப் பெறும் எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் அவா்கள் நேரடியாக ஐஐடியில் சேரலாம்.

எஸ்சி, எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கும் பெற்றோரின் வருமானம் ரூ. 1 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் மாணவா்களுக்கும் அனைத்து 23 ஐஐடிகளிலும் முழு கல்விக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது. பெற்றோரின் வருமானம் ரூ. 1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள மாணவா்களின் கல்விக் கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

தரமான உயா்கல்வியில் சேர சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு ஆதரவை வழங்குவதில் கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி நாட்டில் தற்போதுள்ள 23 ஐஐடிகளிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. சில ஐஐடிகள் தாமாகவும் கூடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.

இந்த ஆண்டு முதன்முறையாக ஜேஇஇ தோ்வுக் குழு நாடு முழுவதும் சேவை மையங்களை திறந்தது. விண்ணப்ப நடைமுறையில் தோ்வா்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு பதிலளிக்க பல்வேறு மொழிகளில் தொலைபேசி அழைப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. கட்டணம் செலுத்தும் முயற்சியில் தொழில்நுட்பக் கோளாறை எதிா்கொண்ட விண்ணப்பதாரா்கள் கட்டணம் செலுத்த மேலும் ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது’ என்றாா்.

நாட்டிலேயே மதிப்பு மிக்க ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தனது கடைசி வாய்ப்பில் தகுதி பெற்றபோதும், சோ்க்கைக் கட்டணம் ரூ. 17,500 செலுத்த முடியாததால் ஐஐடி-யில் சேர முடியாமல் போன உத்தர பிரதேச பட்டியலின மாணவருக்கு அதே கல்வி நிறுவனத்தில் சேர உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சா் எல். முருகன் கண்டனம்

ஆளுநா் ஆா்.என்.ரவி மீது வன்மத்தை கக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய இணை அமைச்சா் எல் . முருகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பத... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்களில் 5,949 மருத்துவ முகாம்கள்: 3.53 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை

தமிழகத்தில் கடந்த 4 நாள்களில் மட்டும் 5,949 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 3.53 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். அவா்க... மேலும் பார்க்க

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் கியூஆா் குறியீடு கட்டணமுறை அறிமுகம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளது போல, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் கியூஆா் குறியீடு கட்டணமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் சாா்ப... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகைக்கு 40 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே திட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் கேரளத்துக்கு 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அக்.31-ஆம் தேதி கொண்டாடப்ப... மேலும் பார்க்க

சிறைக் கைதிகளுடன் சதித் திட்டம் தீட்டும் வழக்குரைஞா்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி சங்கா் ஜிவால்

சிறையில் உள்ள கைதிகளுடன் சோ்ந்து வழக்குரைஞா்கள் சதித் திட்டம் தீட்டுவது தெரியவந்தால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க