செய்திகள் :

பீகார் தேர்தல்: லாலுவை கைவிடாத யாதவர்கள் - அணுகுமுறையை மாற்றிய பாஜக கூட்டணி!

post image

பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு பா.ஜ.க தங்கள் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்துக்கொண்டன. ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை. சில தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பிரச்னைக்கு தீர்வு காண இன்று ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவை சந்தித்து பேசுகிறார்.

மற்றொரு புறம் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அனைத்து தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கிவிட்டன.

வேட்பாளர் தேர்வில் புதிய அணுகுமுறை

பா.ஜ.கவும், ஐக்கிய ஜனதா தளமும் இம்முறை வேட்பாளர் தேர்வில் புதிய அணுகுமுறையை கையாண்டுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 16 யாதவ் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியிருந்தது. ஆனால் இம்முறை வெறும் 6 யாதவ் சமுதாய வேட்பாளர்களை மட்டுமே வேட்பாளர்களை மட்டுமே அறிவித்துள்ளது.

இதே போன்று பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் வேட்பாளர் தேர்வில் புதிய அணுகுமுறையைத்தான் பின்பற்றியிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கடந்த சட்டமன்ற தேர்தலில் யாதவ் சமுதாயத்தை சேர்ந்த 18 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. ஆனால் இம்முறை யாதவ் சமுதாயத்தை சேர்ந்த வெறும் 8 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியிருக்கிறது. பா.ஜ.கவும், ஐக்கிய ஜனதா தளமும் குஷ்வாஹா மற்றும் மிகவும் பின் தங்கிய நிஷாத் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வேட்பாளர் தேர்வில் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

இதற்கு முன்பு, அதாவது 2014-ம் ஆண்டுக்கு பிறகு பா.ஜ.க அதிக அளவில் யாதவ் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தது. பீகாரில் 14 சதவீத மக்கள் தொகையை கொண்ட மக்கள் எப்போதும் லாலு பிரசாத் யாதவிற்கேதான் ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார்கள்.

அவர்களை தங்களது பக்கம் இழுக்க தொடர்ச்சியாக அச்சமுதாய மக்களுக்கு பா.ஜ.கவும், ஐக்கிய ஜனதா தளமும் வாய்ப்பு கொடுத்தது. ஆனால் யாதவ் சமுதாய மக்கள் தங்களது ஆதரவை பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் பக்கம் திருப்புவதற்கான எந்த வித அறிகுறியும் தென்படவே இல்லை.

கடந்த மக்களவை தேர்தலில் யாதவ் சமுதாய மக்கள் அதிக அளவில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான கூட்டணியையே ஆதரித்தனர். எனவேதான் யாதவ் சமுதாயத்தினரை நம்பி மோசம் போவதைவிட அடுத்த இடத்தில் இருக்கும் குஷ்வாஹா மற்றும் இதர சமுதாயத்தினரின் ஆதரவை பெறும் வேலையில் பா.ஜ.க தீவிரம் காட்ட ஆரம்பித்து இருக்கிறது.

எனவேதான் யாதவ் அல்லாத சமூகத்தினர், பட்டியலினத்தவர்கள், பின் தங்கிய வகுப்பினரை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் விதமாக அந்த சமூகனக்களை சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்புகளை பா.ஜ.கவும் ஐக்கிய ஜனதா தளமும் கொடுத்து இருக்கிறது.

நரேந்திர மோடி

ராம் சூரத் ராய் போன்ற யாதவ் சமுதாய எம்.எல்.ஏ.க்களுக்கு கூட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதோடு ஏழு முறை தேர்தலில் வெற்றி பெற்ற நந்த் கிஷோர் யாதவருக்குக் கூட வாய்ப்பு வழங்கவும் பா.ஜ.க மறுத்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளமும் இம்முறை குஷ்வாஹா சமுதாயத்தை சேர்ந்த 25 பேரை தேர்தலில் நிறுத்தியுள்ளது. இது தவிர பொருளாதாரத்தில் முன்னேறிய சமூகத்தினர் 22 பேரையும், மிகவும் பின் தங்கிய வகுப்பை சேர்ந்த 22 பேருக்கும் தேர்தலில் வாய்ப்பு கொடுத்துள்ளது. இதே போன்று ஐக்கிய ஜனதா தளம் இம்முறை வெறும் 11 இஸ்லாமிய வேட்பாளர்களை மட்டும் களத்தில் நிறுத்தியுள்ளது. இது தவிர இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பின்தங்கியவர்கள் 52 பேருக்கு பா.ஜ.க வாய்ப்பு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

”நெல் மூட்டை மழையில் நனைந்து முளைத்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி நாடகம் ஆடுகிறார்” - உதயநிதி காட்டம்

நெல் கொள்முதல் பணிகள் விரைவாக நடக்காததால் கொள்முதல் நிலையங்களிலும், சாலையோரங்களில் நெல்லை கொட்டிவைத்து நாள்கணக்கில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பெய்த மழையால் பல இடங்களில் ந... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: “வயித்தெரிச்சல்ல இருக்கோம்; யார் பொய் சொல்றா?”- உதயநிதி குறிப்பிட்ட பெண் விவசாயி குமுறல்

நெல் கொள்முதலில் ஏற்பட்ட தாமதத்தால் அறுவடை செய்த நெல் மற்றும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் தொடர் மழையில் நனைந்ததில் முளைத்து சேதமடைந்ததாக டெல்டா விவசாயிகள் கூறி வந்தனர். இதையடுத்து கடந்த 22ம் ... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: ”விஜய்கோ, தவெக கட்சியினருக்கோ போதிய அரசியல் அனுபவம் இல்லை” – வைகோ

நண்பரின் மனைவி மறைவுக்குத் துக்கம் விசாரிப்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திண்டுக்கல் வந்திருந்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததை நாங்கள் வரவேற்... மேலும் பார்க்க

Silent Mode-ல் Vijay , EPS-ன் 3 வெடி , Stalin ஷாக்? | Elangovan Explains

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு, நெல் கொள்முதல் விவகாரம் என மூன்று ரூட்டில் இறங்கி ஆடத் தொடங்கியுள்ளார் எடப்பாடி. இதில் நெல் கொள்முதல் விவகாரத்தில், 'திமுக அரசு, விவசாயிகளை வஞ்சித்துவிட்ட... மேலும் பார்க்க

திண்டுக்கல்: சிதிலமடைந்த பாலம்; அச்சுறுத்தும் பள்ளம்... அலட்சிய அதிகாரிகளால் மக்கள் கவலை!

திண்டுக்கல் மாவட்டம், தோட்டனுத்து கிராமத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய சிமெண்ட் சாலையுடன் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டது. தற்போது அந்த வாய்க்கால் இணையும் பாலத்தில் பெரிய பள்ளம் ஒன்று உரு... மேலும் பார்க்க