புதிதாக 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள்!
சென்னையில் இன்றுமுதல்(நவ. 14) புதிதாக 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஏற்கெனவே சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட 8 மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகளில் உள்ள புறக்காவல் நிலையங்களில், சுழற்சி முறையில் 1 உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்;
இதையும் படிக்க: ரூபாய் மதிப்பு கடும் சரிவு!
இந்நிலையில் இன்றுமுதல் (நவ. 14) எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, காந்திநகர் அரசு மருத்துவமனை, அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை, கே.கே. நகர் அரசு மருத்துவமனை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, அமைந்தகரை அரசு மகப்பேறு மருத்துவமனை, பெரியார் நகர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 8 மருத்துகளில் புறக்காவல் நிலையங்கள் ஏற்படுத்துப்பட்டு. சுழற்சி முறையில் 2 காவலர்கள் பணியமர்த்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.