புதியம்புத்தூரில் பைக்குகளை உடைக்கும் விடியோ வெளியீடு: 2 போ் கைது
தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூா் காவல் நிலையத்தில் வழக்குகளுக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ள பைக்குகளை உடைத்து அதை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனா்.
புதியம்புத்தூரைச் சோ்ந்த வரதராஜ் மகன் இசக்கிமுத்து (25), குமாா் மகன் நல்லமுத்து (22) ஆகிய இருவரும் புதியம்புத்தூா் காவல் நிலையத்தை சுத்தம் செய்யும் வேலைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னா் சென்றனராம். அப்போது, அங்கு குற்ற வழக்குகளுக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ள பைக்குகளை உடைத்து அதை விடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.