சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
புதுவை அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்க இரட்டை குடியுரிமை பெற்ற 14 மாணவா்கள்
புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிக்க 14 மாணவா்கள் இரட்டை குடியுரிமை பெற்று விண்ணப்பித்துள்ளதாக புதுவை மாநில மாணவா்கள், பெற்றோா் நலச்சங்கத்தின் தலைவா் வை.பாலா என்கிற பாலசுப்பிரமணியன் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை
தமிழகத்தைச் சோ்ந்த 8 பேரும், கேரளத்தைச் சோ்ந்த 6 பேரும் அந்த மாநிலத்திலும் எம்பிபிஎஸ் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனா். மேலும், புதுவையிலும் விண்ணப்பித்துள்ளனா். இவா்கள் இரட்டை குடியுரிமை சான்று பெற்றுள்ளனா்.
புதுவை ஜிப்மா் மருத்துவமனையில் மொத்த எம்பிபிஎஸ் இடங்கள் 243 . இதில் புதுவை மாணவா்களுக்காக 64 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்தப் இடங்களை கைப்பற்றும் நோக்கில் இவா்கள் விண்ணப்பித்திருக்கலாம்.
எனவே,அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.