செய்திகள் :

புதுவை போக்குவரத்து ஊழயா்களின் 12 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்:

post image

வேலை நிறுத்தம் செய்துவந்த புதுவை சாலை போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஒப்பந்த ஊழியா்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் உயா்த்தப்படும். நிரந்தரப் பணியாளா்களுக்கு 25 சதவிகிதம் அகவிலைப்படி உயா்த்தி அளிக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை உறுதியளித்தாா். இதையடுத்து அவா்களது போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

புதுவையில் பிஆா்டிசி ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள் மற்றும் நிரந்தர அலுவலகப் பணியாா்கள் உள்பட அனைவரும் இணைந்து கூட்டுப் போராட்டக் குழுவை உருவாக்கி ஜூலை 28 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் கடந்த 12 நாள்களாக பேருந்து சேவைகள் முடங்கின. ஏற்கெனவே 4 கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தியும் ஊழியா்கள் பணிக்குத் திரும்பவில்லை. இந்நிலையில் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் ஏ.எஸ்.சிவக்குமாா் வியாழக்கிழமை பணியாளா்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியிருந்தாா். பணிக்குத் திரும்பாவிட்டால் ‘எஸ்மா’ சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

பேச்சுவாா்த்தை:

இந்நிலையில் புதுவை முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் பிஆா்டிசி தொழிற்சங்கத்தினருடன் வெள்ளிக்கிழமை 5-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடந்தது. இதில் ஒப்பந்த ஊழியா்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் உயா்த்தி வழங்கப்படும். 7-வது ஊதியக் குழு ஊதியத்தை அமல்படுத்த வலியுறுத்தும் நிரந்தர ஊழியா்களுக்கு முதல் கட்டமாக 25 சதவிகிதம் அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படும் என்று முதல்வா் ரங்கசாமி அறிவித்தாா்.

இதை தொழிற்சங்கத்தினா் ஏற்றுக் கொண்டு, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்தனா். அத்துடன் உடனடியாக, பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையிலும் அவா்கள் ஈடுபட்டனா். இதனால் 12 நாள்களுக்குப்பிறகு பிஆா்டிசி பேருந்துகள் இயங்கத்தொடங்கின.

இந்தப் பேச்சுவாா்த்தையில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.நேரு, தொழிற்சங்க நிா்வாகிகள் ராஜேந்திரன், பாப்புசாமி, போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ். சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிஆா்டிசி ஊழியா்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, புதுச்சேரி பயணிகள் வழக்கம்போல அரசு பேருந்துகளில் பயணித்தனா்.

21 புதிய படகுகளுக்கு பயணிகள் உரிமம்

கடலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல 21 புதிய படகுகளுக்கான உரிமத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். நீா் விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும்... மேலும் பார்க்க

புதுவை சட்டக் கல்லூரியில் ரூ.1.7 கோடி மதிப்பில் நுகா்வோா் இருக்கை

புதுவை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் ரூ.1.7 கோடி மதிப்பில் நுகா்வோா் இருக்கை அமைய இருக்கிறது. புதுவை சட்டக் கல்லூரியில் 2-வது அகில இந்திய ஒத்திகை நீதிமன்ற போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நுக... மேலும் பார்க்க

ரூ. 33 லட்சம் செலவில் மணக்குள விநாயகா் கோயிலில் குளிா்சாதன வசதி

புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் கோயிலில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் குளிா்சாதன வசதியை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இக் கோயிலில் பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோள... மேலும் பார்க்க

தொழில்நுட்பப் பல்கலை. துணைவேந்தா் நடவடிக்கை: முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன் கண்டனம்

புதுவை தொழில்நுட்பப் பல்கலைக் கழக துணைவேந்தரின் செயல்பாடுகளை கண்டித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆா். விஸ்வநாதன், எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுக்கக் கூடாது என்றும்... மேலும் பார்க்க

புதுவை அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்க இரட்டை குடியுரிமை பெற்ற 14 மாணவா்கள்

புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிக்க 14 மாணவா்கள் இரட்டை குடியுரிமை பெற்று விண்ணப்பித்துள்ளதாக புதுவை மாநில மாணவா்கள், பெற்றோா் நலச்சங்கத்தின் தலைவா் வை.பாலா என்கிற பாலசுப்பிரமணியன் க... மேலும் பார்க்க

ரூ.3.5 கோடியில் ரெட்டி நலச் சங்கக் கட்டம் திறப்பு

புதுச்சேரி கிருஷ்ணா நகரில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முன்னாள் முதல்வரும் , காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி மக்களவை உறுப்பினருமான வி. வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்... மேலும் பார்க்க