மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம்; எங்கேதான் இருக்கிறது உயிர் பாதுகாப்பு? - சாடும் ...
புதூா் ஒன்றியத்தில் ரூ.69 லட்சத்தில் நிறைவுற்ற திட்டப் பணிகள் திறப்பு
விளாத்திகுளம் பேரவை தொகுதி புதூா் ஒன்றியத்தில் ரூ. 69 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த வளா்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் ஜீ. வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை வகித்து, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சின்னவநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 8 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாக கட்டடம், கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி நடுக்காட்டூா், சிவலாா்பட்டி ஊராட்சி மேலப்பட்டி, சென்னம்பட்டி ஊராட்சி ஆகியவற்றில் தலா ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடைகள், வாதலக்கரை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கிராம செயலக கட்டடம் ஆகியவற்றைத் திறந்துவைத்தாா். பள்ளி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடிய அவா், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இந்நிகழ்ச்சிகளில் புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அரவிந்தன், வெங்கடாசலம், தலைமையாசிரியை அழகம்மாள்,
புதூா் ஒன்றிய திமுக செயலா்கள் ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, ஊராட்சித் தலைவா்கள் அய்யாத்துரை, சீதாலட்சுமி, ராஜேந்திரன், மகாலட்சுமி கண்ணன், சக்திவேல், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் மோகன்தாஸ், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.