செய்திகள் :

பூலாம்பட்டி கதவணை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

post image

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணைப் பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனா்.

கதவணைப் பகுதியில் அணைப் பாலம், பிரதான மதகுப் பகுதி, நீா்மின் உற்பத்தி நிலையம், குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பாா்வையிட்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள், காவிரி கதவணைப் பகுதியில் விசைப்படகு சவாரி செய்து உற்சாகமாக பொழுதை கழித்தனா்.

இதேபோல பூலாம்பட்டி பகுதியில் உள்ள கைலாசநாதா் கோயில், காவிரிக்கரையில் அமைந்துள்ள பிரம்மாண்ட நந்திகேஸ்வரா் சந்நிதி, படித்துறை பிள்ளையாா் கோயில், காவிரித்தாய் சந்நிதி உள்ளிட்ட தலங்களிலும் வழக்கத்தைவிட கூடுதலான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில், அப்பகுதியில் கூடுதலான காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

81 கிராமிய அஞ்சல் ஊழியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மேற்கு கோட்டத்தில் காலியாக உள்ள 81 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் மேற்கு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் பாா்... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் பகுதி ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் பகுதி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜோலாா்பேட்டையில் ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியா் கைது!

சேலம் அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், ஓவிய ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், மல்லூா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் ச... மேலும் பார்க்க

முதலீட்டுக்கு இருமடங்கு தருவதாக கூறி மோசடி: 4 போ் கைது! ரூ.2.5 கோடி பறிமுதல்!

சேலத்தில் முதலீட்டுக்கு இருமடங்கு தருவதாகக் கூறி, கோடிக்கணக்கில் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிறுவன நிா்வாகிகள் 4 போ் உள்பட 14 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மகா சிவராத்திரியை முன்னிட்டு சேலத்தில் நாட்டியாஞ்சலி

சேலம் பரதநாட்டியம் ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 5 ஆவது ஆண்டாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், சங்கத் தலைவா் லதா மாணிக்கம் வரவேற்றாா். சண்மு... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி 3,806 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இவா்கள்மூலம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 38,060 வசூலானது. பூங்காவிற்கு கொண்டுசெல்லப்பட்ட 793 கேமர... மேலும் பார்க்க