Periyar-ஐ டார்கெட் செய்த Seeman பின்னணி இதுதான்! | Elangovan Explains | Vikatan
பெண்ணுக்கு பேசணும்; ஆணுக்கோ தூங்கணும்... இது என்ன கலாட்டா..? - காமத்துக்கு மரியாதை 227
எல்லா கணவர்களும் செய்யுற ஒரு தப்பு. இந்த தப்பால மனசு வருத்தப்படாத மனைவி உலகத்திலேயே இல்லைன்னு தான் சொல்லணும். அப்படி என்ன தப்பை கணவர்கள் பண்றாங்கன்னு யோசிக்கிறவங்க டாக்டர் காமராஜ் சொல்றது சொல்றதை படிக்க ஆரம்பியுங்க.
''பொதுவா தாம்பத்திய உறவு தொடர்பான பிரச்னைகளை அதற்கான எக்ஸ்பர்ட் கிட்ட பேசி தீர்வு தேடற பெண்கள் இங்க ரொம்ப ரொம்ப குறைச்சல். அபூர்வமா ஒரு சில பெண்கள் அப்படி பேசுவாங்க. அவங்களும் பெரும்பாலும் ஓவர் தி போன் வழியா தான் தங்களோட பிரச்னைகளை சொல்லி தீர்வு கேட்பாங்க. அன்னைக்கு அப்படியொரு போன் கால்தான் எனக்கு வந்துச்சு.
'எங்களோடது லவ் மேரேஜ் டாக்டர். ரெண்டு குடும்பமும் எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கல. ரொம்ப போராடிதான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்போ எங்களுக்கு கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான புதுசுல அவ்ளோ லவ்வபுல் தம்பதியா இருந்தோம். இப்பவும் எங்களுக்கு நடுவுல நிறைய லவ் இருக்கு. ஆனா, ஒரே ஒரு விஷயம்தான் எனக்கு ரொம்ப நாளா புரியவே மாட்டேங்குது. தாம்பத்திய உறவு வெச்சிக்கிறப்போ, என் ஹஸ்பண்ட் பயங்கர ரொமான்டிக் பர்சனா இருப்பார். என் மேல லவ்வை அப்படியே பொழிவார். ஆனா, உறவு முடிஞ்சவுடனே, அதாவது நான் பாத்ரூம் போயிட்டு வர்றதுக்குள்ள நல்லா தூங்க ஆரம்பிச்சிருப்பார். எனக்கு இது ஆரம்பத்துல ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. சரி ஆபீஸ்ல நிறைய வேலை போல. அதனாலதான் படுத்தவுடனே தூங்கிடுறாருன்னு நெனச்சேன். ஆனா, இப்ப சமீபத்துலதான் ஒரு விஷயம் எனக்கு புரிஞ்சுது.
உறவு வெச்சுக்காத நாட்கள்ல அவரு என்கூட கொஞ்ச நேரம் பேசிட்டுதான் தூங்குறாரு. ஆனா, உறவு வெச்சிக்கிற நாட்கள்லதான் உறவு முடிஞ்ச அடுத்த நிமிஷமே அவர் தூங்கிடுறாருங்கறத நான் கண்டுபிடிச்சேன். இதுபத்தி அவர்கிட்டயும் நான் பேசினேன். நான் சொன்னதைக் கேட்ட அவர், 'அப்படியா நான் அவ்ளோ வேகமாகவா தூங்கிடுறேன்னு ஆச்சரியமா கேட்டார். எனக்கு நடந்த இந்த விஷயத்தைப் பற்றி என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல ஷேர் பண்ணப்பத்தான் அவங்களுக்கும் இதே பிரச்னை நடந்துக்கிட்டு இருக்குன்னு தெரிய வந்துச்ச. யாராவது டாக்டர்ஸ் கிட்ட பேசினீங்களான்னு கேட்டதுக்கு இத பத்தி எல்லாம் எப்படி டாக்டர்ஸ் கிட்ட சொல்றதுன்னு தயக்கமா இருக்குன்னாங்க. ஆனா, என்னால இதை அக்செப்ட் பண்ணிக்கவே முடியல டாக்டர்.
அவங்க எல்லாம் அரேஞ்ச் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க. லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க கூட எங்க அளவுக்கு போராடியெல்லாம் கல்யாணம் பண்ணல. என்னை பொறுத்தவரைக்கும் எங்களோட லவ் மத்தவங்களுடைய லவ்வைவிட ரொம்ப ஸ்பெஷல். எங்க தாம்பத்திய உறவுல இது எப்படி நடக்கலாம்னு எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு டாக்டர். ஒருக்கால் அவருக்கு நான் சலிக்க ஆரம்பிச்சிட்டேனா அப்படின்னு தோண ஆரம்பிச்சிடுச்சு. இதுக்கு நீங்கதான் ஒரு தீர்வு சொல்லணும்'என்று பேசி முடிச்சார்.
இந்த பிரச்னையை சந்திக்காத மனைவிகளே இந்த உலகத்துல இல்லைன்னுதான் சொல்லணும். அந்தளவுக்கு பொதுவான ஒரு விஷயமிது. இந்த விஷயம் புரியணும்னா சில ஹார்மோன்கள் பத்தி உங்களுக்கு தெரியணும்னு அவங்களுக்கு விளக்கிச் சொல்ல ஆரம்பிச்சேன். தாம்பத்திய உறவுல ஆர்கஸம் அடைஞ்சவுடனே, மனிதர்களோட மூளையிலிருந்து ஆக்ஸிடோசின், டோபமைன் போன்ற மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கும். இதுல ஆக்ஸிடோசின் ஹார்மோன், உறவுக்குப் பிறகு கொஞ்ச நேரம் கட்டிப்பிடிச்சுட்டு பேசணும்; கொஞ்சணும் அப்படிங்கிற எண்ணங்களை பெண்களுக்கு ஏற்படுத்தும். ஆனா, இதே ஹார்மோன்கள் ஆண்களுக்கு மூளையில் இருக்கிற தூக்க மையத்தை தூண்டி விட்டுடும். தாம்பத்திய உறவு முடிஞ்சவுடனே, ஆண் பெண் உடம்புல நடக்கிற மிகப்பெரிய வித்தியாசமான மாற்றம் இது.
அதனாலதான், உறவு முடிஞ்சதும் கணவர்கள் உடனே தூங்கிடுறாங்க. இதுவொரு இயல்பான விஷயம்தான். இதனால உங்க கணவருக்கு நீங்க போர் அடிச்சுட்டீங்கன்னு அர்த்தம் கிடையாது. அவருக்கு உங்க மேல காதல் குறைந்து போயிடுச்சுன்னும் அர்த்தம் கிடையாது. அதனாலதான், உறவு முடிஞ்சதும் தூங்கிடுறீங்கன்னு நீங்க சொன்னதையும் அவர் ஆச்சரியமா கேட்டிருக்காரு. அவர் மேல எந்த தப்பும் கிடையாது. இது ஹார்மோன்களோட வித்தியாசம். உங்க காதல் வாழ்க்கையை நீங்க சந்தோஷமா தொடருங்கன்னு அவங்க கிட்ட சொன்னேன். இதே பிரச்னையை யாரெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்கிட்டு இருக்கீங்களோ, அவங்களுக்கும் இதுதான் தீர்வு''ன்னு சொல்லி முடிச்சார் டாக்டர் காமராஜ்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...