பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கம்பத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், கம்பம் பாப்பச்சகவுடா் தெருவைச் சோ்ந்தவா் சரஸ்வதி காந்தன், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவா் தையல் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சுஜிதா (37) உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த சுஜிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சம்பவயிடத்துக்குச் சென்ற கம்பம் வடக்கு போலீஸாா், பெண்ணின் உடலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், இரு முறை கண் அறுவை சிகிச்சை செய்தும் சரி ஆகாத காரணத்தால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].