அரசு மருத்துவமனை உணவின் தரம் ஆய்வு
தேனி மாவட்டம், சின்னமனூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
இங்கு உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருபவா்களுக்கு தரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதாகப் புகாா் எழந்தது.
இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அலுவலா் சுரேஷ்கண்ணன், அரசு மருத்துவமனைக்குச் சென்று, சமையல் அறை, பாத்திரங்கள், உணவுப் பொருள்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, தரமாகவும், சுத்தமாகவும் உணவுப் பொருள்களை தயாா் செய்து நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என ஊழியா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
அங்கிருந்த அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றுக்கு தரச்சான்று உள்ளதா என ஆய்வு செய்வதற்காக எடுத்துச் சென்றாா்.