காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!
பெரியார் விவகாரம் : `சீமான் அண்ணனுக்கு நான் ஆதாரம் தருகிறேன்' - அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதலமைச்சர், அமைச்சர்கள் கடந்த 15 நாள்களாக என்னென்ன பேசினார்கள்.
ஞானசேகர் யார் என்றே தெரியாது என்று கூறினார்கள். ஆனால் தற்போது அவர் திமுக அனுதாபி என்று முதலமைச்சரே கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மாறுபட்ட கருத்துகளை சொல்லி வருகிறார். முதலமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி இல்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது. முதலமைச்சர் ஒரு மூத்த அமைச்சரை மதுரைக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சீமான் அண்ணனுக்கு ஆதரவு தெரிவித்து நான் மாலை ஆவணங்களை வெளியிடுகிறேன்.
பெரியார் எந்த புத்தகத்தில் அப்படி பேசினார் என்ற ஆதாரத்தை நான் கொடுக்கிறேன். இருப்பினும் அதை பொதுவெளியில் பேச விரும்பவில்லை. பெரியார் பேசியதை பொது வெளியில் பேசினால் மக்களுக்கு அருவருப்பாக இருக்கும்.
கோவை பீப் கடை உரிமையாளரிடம் பாஜக நிர்வாகி பேசும் வீடியோவை பார்த்தோம். கோயிலுக்கு அருகே பீப் கடை வேண்டாம் என்று தான் பாஜக நிர்வாகி கூறினார். அவர் தன் கருத்தை மட்டுமே கூறினார். எங்கும் சண்டை போடவில்லை.
ஆனால் அந்த வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு, இரண்டு சமுதாயத்தினரிடையே மோதல் ஏற்படுத்தும் நோக்கில் இதை தவறாக பரப்பியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையில் புகாரளித்துள்ளோம். எங்கள் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்.” என்றார்.