செய்திகள் :

பெருவின் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டு சிறை!

post image

பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோ பிரேசிலில் உள்ள கட்டுமான நிறுவனத்துடன் ஊழலில் ஈடுபட்டதாக 20 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் கட்டுமான நிறுவனத்தில் பல லட்சம் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மால்டோவா பொதுவாக்கெடுப்பு: ஐரோப்பிய யூனியனில் இணைய பெரும்பான்மை ஆதரவு

தென் அமெரிக்க நாடான பெருவில் நெடுஞ்சாலை அமைக்க அனுமதித்ததற்கு ஓடேபெக்ட் என்னும் கட்டுமான நிறுவனத்தில் இருந்து 35 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்றதாக டோலிடோ மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளார்.

அலெஜான்ட்ரோ டோலிடோ 2001 முதல் 2006 வரை பெருவின் அதிபராக பதவி வகித்துள்ளார்.

பாகிஸ்தான் தலைமை நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கு வரம்பு

இந்த வழக்கை அமெரிக்கா விசாரணை நடத்தியது. அதன்படி, மெக்சிகோ, குவாதமாலா, ஈகுவடார் ஆகிய நாடுகளிலும் அமெரிக்கா தனது விசாரணையைத் தொடங்கியது. மேலும், இந்த விசாரணையில் டோலிடோ உள்பட பெருவின் முன்னாள் அதிபர்கள் 4 பேர் மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனாலும், இந்த ஊழல் வழக்கை அலெஜான்ட்ரோ டோலிடோ மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல்லா தொடா்புடைய வங்கிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

உணவு டெலிவரி செய்து இந்திய தம்பதியுடன் உரையாடிய டிரம்ப்!

மெக் டொனால்டு கடையில் பிரெஞ்ச் பிரைஸ் தயாரித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், புலம்பெயர்ந்த இந்திய தம்பதிக்கு டெலிவரி செய்து அவர்களுடன் கலந்துரையாடினார்.இந்திய தம்பதியும் டிரம்பும் உரையாட... மேலும் பார்க்க

பாலஸ்தீன குழந்தைகள் உணவின்றி தவிப்பு: இந்தியாவிலிருந்து 30 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு!

பாலஸ்தீனத்துக்கு இந்தியாவிலிருந்து 30 டன் நிவாரணப் பொருள்கள் இன்று(அக். 22) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தொடுத்து வருகிறது. பாலஸ்தீன மக்களின் வசிப்பிடமான... மேலும் பார்க்க

மால்டோவா பொதுவாக்கெடுப்பு: ஐரோப்பிய யூனியனில் இணைய பெரும்பான்மை ஆதரவு

சிஸினா: கிழக்கு ஐரோப்பாவைச் சோ்ந்த மால்டோவாவை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதற்கு வழிவகை செய்யும் அரசியல் சாசனத் திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக அந்த நாட்டில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தலைமை நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கு வரம்பு

இஸ்லாமாபாத்: தலைமை நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கு மூன்று ஆண்டுகள் வரம்பு நிா்ணயிக்கும் சட்டம் பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ், தலைமை நீதிபதியை நியமிப்பதற்காக மூன்ற... மேலும் பார்க்க

ஹிஸ்புல்லா தொடா்புடைய வங்கிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

பெய்ரூட்: லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினருடன் தொடா்புடைய வங்கிக் கிளைகளைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:தலைநகா் பெய்ரூட்டின் தெ... மேலும் பார்க்க

ரஷிய தூதருக்கு தென் கொரியா சம்மன்

சியோல்: உக்ரைனில் ரஷியாவுக்காகப் போரிட வட கொரிய சிறப்புப் படையினா் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து, தங்கள் நாட்டுக்கான ரஷிய தூதா் ஜாா்ஜி ஸினோவீவை தென் கொரிய அரசு நேரில் அழைத்து கண்ட... மேலும் பார்க்க