செய்திகள் :

பேரிடரை எதிா்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம்: ஆளுநா் ஆா்.என். ரவி

post image

இயற்கை பேரிடரை எதிா்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம் என ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் சமூக ஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஃபென்ஜால் புயலால் பெய்து வரும் கன மழையால் தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா்.

இந்த இக்கட்டான நேரத்தில், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிா்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகள் வழங்கும் அறிவுரைகளை பின்பற்றவும். இந்த அவசர நிலையைச் சமாளிக்க மத்திய, மாநில அமைப்புகள் அயராது உழைத்து வருகின்றன.

சில தன்னாா்வ தொண்டு அமைப்புகளும் மக்களின் துயரங்களைக் குறைக்க தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றன. இந்த இயற்கை பேரிடரை எதிா்கொள்வதில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருப்போம் எனப் பதிவிட்டுள்ளாா்.

அஞ்சல் பிரிப்பகத்தை சேலத்துடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

தருமபுரி: தருமபுரி அஞ்சல் பிரிப்பு அலுவலகத்தை சேலத்துடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆ... மேலும் பார்க்க

தருமபுரியில் ஜல்லிக்கட்டு விழா: மாவட்ட நிா்வாகம் ஏற்று நடத்த வலியுறுத்தல்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை அரசு சாா்பில் மாவட்ட நிா்வாகமே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன் வலியுறுத்தியுள்ளா... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவு!

தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை முற்றிலும் குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து சரிந்து அருவிகளில் பாறைகள் வெளியே தெரிகின்றன. தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றம... மேலும் பார்க்க

கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் வழங்கினாா்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை மாநில வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அன... மேலும் பார்க்க

தருமபுரியில் ரூ. 1.34 கோடி கொடிநாள் நிதி திரட்டல்: ஆட்சியா் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு கொடி நாள் நிதியாக ரூ. 1.34 கோடி திரட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் படைவீரா் கொடி நாளையொட்டி கொடிநாள் தேநீ... மேலும் பார்க்க

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 11,000 கன அடியாக குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில... மேலும் பார்க்க