செய்திகள் :

"பைசன் வெறும் படமல்ல; அது ஒரு உணர்வு; நமக்குள் ஏற்படும் மாற்றம்" - நடிகை அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்

post image

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பைசன்'. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்

இன்ஸ்டா பதிவு

நடிகை அனுபமா பரமேஸ்வரன் குறிப்பிட்டதாவது, “பைசன் படத்தில் 10 நாட்கள்... பைசனின் 10 நாட்கள்... என் இதயம் இன்னும் தனக்குக் கிடைத்த அன்பை எப்படித் தக்க வைத்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டே இருக்கிறது. சில படங்கள் வெறும் புராஜெக்ட்களாக இருப்பதில்லை, அவை ஒரு உணர்வாக, ஒரு பருவமாக, நமக்குள்ளே ஒரு அமைதியான மாற்றமாக மாறிவிடுகின்றன. பைசன் எனக்கு அப்படித்தான்.

என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றும் வகையில் என்னைப் பாதித்த ஒரு படம். இந்த உலகத்தில் வாழ்வதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “மாரி செல்வராஜ் சார், இந்தக் கதைக்கு என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. உங்கள் நம்பிக்கைக்கு, நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் நாயகன் துருவ் விக்ரமைப் பாராட்டி அவர் கூறியதாவது, “நமது சூப்பர் ஸ்டார் துருவ் விக்ரம், வாழ்த்துக்கள். இது அதிர்ஷ்டம் அல்ல... உழைப்பால் சம்பாதிக்கப்பட்டது. இந்த வெளிச்சத்தின் ஒவ்வொரு துளிக்கும் நீங்கள் தகுதியானவர்” என்று மனதார பாராட்டியுள்ளார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்

மேலும் சக நடிகையான ரஜிஷா விஜயன், இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் தயாரிப்பு நிறுவனங்களான அப்ளாஸ் சோஷியல், நீலம் ஸ்டுடியோஸ் ஆகியோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இறுதியாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “உண்மையுடன் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை அரவணைத்து, அதை இவ்வளவு கொண்டாடி, திரையில் மட்டும் இல்லாமல் உங்கள் இதயங்களிலும் இடமளித்த ரசிகர்களுக்கு நன்றி. பைசன் எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் தனது பதிவில் அனுபமா பதிவிட்டுள்ளார்.

``இந்த வெற்று மன்னிப்பையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது" - நடிகை கெளரி கிஷன்

தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ போன்ற திரைப்படங்களிலும், மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துத் பிரபலமானார்.தற்போது ‘OTHERS’ என்ற தமிழ் ப... மேலும் பார்க்க

யூ டியூபில் பேசறதுக்கு திட்டினாங்க‌, இப்ப வெடிகுண்டு மிரட்டல்! - ஏ.எல்.எஸ்.ஜெயந்தி கண்ணப்பன்

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானம், சென்னையில் இயங்கி வரும் சில வெளிநாட்டுத் தூதரங்கங்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி,... மேலும் பார்க்க

"என் தம்பிங்க இல்லனா நான் இல்ல; இந்த சினிமா உலகத்தை அவுங்க தான் காமிச்சாங்க"- கண் கலங்கிய தேவா

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி காலமானார். அவருடைய நினைவு அஞ்சலி கூட்டம் நேற்று (நவம்பர் 09) நடைபெற்றது. அதில் சபேஷ் குறித்து பேசிய இசையமை... மேலும் பார்க்க

IPL: ``வண்டி ஓட்டுவதைக் குறைச்சிட்டு சினிமாவுக்கு வாங்க'' - டிடிஎஃப் வாசன் குறித்து போஸ் வெங்கட்

யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் 'IPL' ( Indian Penal Law) என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை கருணாநிதி எழுதி இயக்கி இருக்கிறார். நடிகர்கள் கிஷோர், போஸ் வெங்கட், நடிகை அபிராமி ஆகியோர் இப... மேலும் பார்க்க

"கறுப்புத் தோலாக இருப்பதால் எங்களுக்கெல்லாம் மரியாதை கிடைப்பதில்லை"- எமோஷனலாக பேசிய சேரன்

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி காலமானார். அவருடைய நினைவு அஞ்சலி கூட்டம் நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சேரன், "... மேலும் பார்க்க