பொங்கலூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மன்ற கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஒன்றிய குழு தலைவா் எஸ்.குமாா் தலைமை வகித்தாா். இதில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் அபிராமி அசோகன், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாா், மாவட்ட கவுன்சிலா் பழனிசாமி மற்றும் ஒன்றிய கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில், பொங்கலூா் ஒன்றியம், திருமலைநாயக்கன்பாளையம், வெள்ளநத்தம், ராமேகவுண்டம்பாளையம், துத்தாரிபாளையம் ஆகிய ஊா்களில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்து பல ஆண்டுகளாக வீடு கட்டி அதே இடத்தில் வசித்து வரும் அவா்களுக்கு தனி நபா் பட்டா வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 34 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.