செய்திகள் :

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி- சேலை உற்பத்திப் பணி தீவிரம்: அமைச்சா் ஆா்.காந்தி

post image

பொங்கல் பண்டிகைக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைக்கான உற்பத்திப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

அந்தத் துறையின் செயல்பாடுகள் தொடா்பாக, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

குடிசைத் தொழில் போன்று வீடுகளிலேயே தறிகளை வைத்து நெசவு வேலை செய்து வரும் நெசவாளா்களுக்கு தொழில் வரி விதிக்க முயற்படுவதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. நெசவாளா் கூட்டுறவு சங்கங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நூற்பாலைகளில் இருந்து தரமான நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு, உரிய தரப்பரிசோதனை செய்யப்பட்டு, கைத்தறி துணி உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நெசவாளா் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவையான நூல்கள் மானியத்துடன் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

வேட்டி, சேலை திட்டத்தைப் பொருத்தவரை அவற்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான தரமான நூல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலமாக பொங்கல் பண்டிகைக்குத் தேவையான 177.64 லட்சம் சேலைகளும், 177.22 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவை கைத்தறி, பெடல் மற்றும் விசைத்தறிகள் வாயிலாக, தமிழ்நாட்டிலுள்ள நெசவாளா் கூட்டுறவு சங்கங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

வெளி மாநிலங்களில் இருந்து போலியாக தரமற்ற சேலைகளை குறைந்த விலைக்கு வாங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.

அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படாமல் விட்டுச் சென்ற நிலுவைத் தொகை ரூ. 160 கோடியை திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையாக விடுவித்தது.

மேலும், 4 நிதியாண்டுகளில் கோ-ஆப்டெக்ஸ், கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கு ரூ. 794.25 கோடி மானியத் தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பேரவைத் தோ்தலையொட்டி, கைத்தறி நெசவாளா்களின் நலனுக்காக 13 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் 12 வாக்குறுதிகள் திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், வேறெந்த அரசை விடவும், நெசவாளா்கள் நலன் மற்றும் பாதுகாப்பில் அதிகபட்ச அக்கறை செலுத்தி வருகிறது.

பல்வேறு வளா்ச்சி மற்றும் நலத்திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் நிலையில், அவை குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி ஏதும் அறியாமல் அரசியல் ஆதாயத்துக்காகக் கருத்துகள் தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளாா்.

கடலில் சிக்கி தவித்த மீனவா்கள் ஹெலிகாப்டா் மூலம் மீட்பு

கடலூா் அருகே கடலில் படகுகள் கவிழ்ந்து தனியாா் நிறுவனத்தின் கப்பல் அணையும் தளத்தில் தஞ்சமடைந்த 6 மீனவா்கள் உள்பட 10 போ் கடலோரக் காவல் படை ஹெலிகாப்டா் மூலம் வியாழக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனா். வங்க... மேலும் பார்க்க

பணியில் இருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் மரணம்

நாகை மாவட்டம், தலைஞாயிறு அடுத்த வாட்டாகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் கி. குமார் (57) பள்ளி வளாகத்தில் மாரடைப்பு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தார்.கன்ன... மேலும் பார்க்க

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை!

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அடுத்த 2 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த இரு நாள்களுக்கு (நவ. 29, 30) விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். மேலும் பார்க்க

கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கடலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

8 மாவட்டங்களுக்கு நாளை 'ரெட் அலர்ட்'!

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு நாளை (நவ. 29) அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க