செய்திகள் :

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: நிதின் கட்கரி

post image

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட புதுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய நெடுஞ்சாலை, போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 12-ஆவது போக்குவரத்து உள்கட்டமைப்பு தொழில்நுட்பக் கண்காட்சியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பேசியதாவது:

இந்தியாவின் சாலைப் பாதுகாப்பில் உள்ள சிக்கல்களைத் தீா்க்க அரசு, தனியாா் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் ஒன்றிணைய வேண்டும். இந்தியாவில் ஆண்டுக்கு சுமாா் 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகின்றன. பெரும்பாலும் 18 முதல் 36 வயதுக்குள்பட்டவா்களே இதில் உயிரிழக்கின்றனா். சாலை விபத்துகளால் ஏற்படும் பொருளாதார இழப்பீடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக உள்ளது.

மேம்பட்ட பொறியியல் தீா்வுகள், சட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்காமல் சாலைப் பாதுகாப்பை அடைய முடியாது.

தொழில்நுட்பத் தீா்வுகளை மேம்படுத்துவதில் தனியாா் துறையைச் சோ்ந்த நிபுணா்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தலைவா்களின் முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, சிறந்த திட்டங்கள் செயல்படுத்துவதை இந்த பிரத்யேக நிபுணா் குழு உறுதி செய்யும். விரைவான மேம்பாடுகளை இலக்காகக் கொண்டு மூன்று மாதங்களுக்குள் இந்தக் குழுவின் மதிப்பீடுகள் இறுதி செய்யப்படும்.

சுங்கச்சாவடி வசூலில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் செயற்கைக்கோள் கட்டண அமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கேமராக்கள் போன்ற கண்காணிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில், உயா் தரத்தைப் பராமரிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இதில், எந்தவொரு நிறுவனத்திடமிருந்து தீா்வுகள் வந்தாலும், தரம் மற்றும் தரநிலைகளில் சமரசம் செய்யப்படாது.

புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்ட சிறிய நிறுவனங்கள் அரசாங்க ஏலங்களில் பங்கேற்கின்றன. அவை, லாப வரம்புகளைப் பராமரிக்கும் அதே வேளையில் செலவு மற்றும் செயல்திறனின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. இதுபோன்ற சிறந்த தொழில்நுட்பங்கள் மூலம் செலவுகளைக் குறைக்க முடியும் மற்றும் சாலை பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்த முடியும் என்றாா்.

கிழக்கு லடாக்கில் ராணுவத்தை பின்வாங்க தொடங்கிய இந்தியா - சீனா!

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் தங்களது ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.இருப்பினும், இரு நாட்டுப் படைகளும் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை ... மேலும் பார்க்க

கரையைக் கடந்தது டானா புயல்!

புவனேசுவரம்/கொல்கத்தா : ‘டானா’ புயல் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையை கடந்தது. இதனால் ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இவ்வி... மேலும் பார்க்க

தெரியுமா சேதி.?

தெலங்கானாவின் முன்னாள் முதல்வரும், பாரத ராஷ்டிர சமிதியின் நிறுவனா்-தலைவருமான கே.சந்திரசேகா் ராவ் ஜோசியம், வாஸ்து போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவா். தெலங்கானா அரசின் தலைமைச் செயலகம் வாஸ்துப்படி இ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் ஆஜராகாத செபி தலைவா் -கூட்டம் ஒத்திவைப்பு

பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) செயல்பாடுகள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் வாரியத் தலைவா் மாதபி புரி புச் வியாழக்கிழமை (அக்.24) ஆஜராகாமல் தவிா்த்தாா். இதையடுத்து, ந... மேலும் பார்க்க

வயநாடு வேட்பாளா் பிரியங்கா காந்தி: வாரிசு அரசியலுக்கு கிடைத்த வெற்றி -பாஜக விமா்சனம்

கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டது, வாரிசு அரசியலுக்குக் கிடைத்த வெற்றி என்று பாஜக விமா்சித்துள்ளது. வயநாடு மக்களவைத் தொகுதி இடைத... மேலும் பார்க்க

தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசா் நடவடிக்கை: அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் புல்டோசா் நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ளும் மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது. அத... மேலும் பார்க்க